இராமநாதபுரம், நவ.6- இலங்கை கடற்படையால் கைது செய் யப்பட்ட 64 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்கக் கோரி தங்கச்சி மடம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.கருணாகரன், இ.ஜஸ்டின், அ.அசோக், கே.மணிகண்டன், ஏ.ஜேம்ஸ் ஜஸ்டின், வி.பழனிக்குமார், கே.கார்த்திக், கே.தியாகு, தர்மபுத்திரன், மீனவர் சங்க நிர்வாகிகள் சகாயம், சேட் ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி. காசிநாததுரை பேசுகையில், ‘‘இலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் பகுதி மீன வர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்ற னர். மேலும் மீனவர்கள் விடுவிக்கப்படும் போது, படகுகளை இலங்கை கடற்படை விடுவிப்பது இல்லை. இதனால், கடன் பெற்று, நகைகளை அடகு வைத்து வாங்கிய சுமார் ரூ.60 லட்சம் மதிப்பிலான படகுகள் உபயோ கிக்க முடியாது அளவிற்கு சேதமடை கின்றன. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்படுவதோடு, அவர்களின் கடன் சுமை யும் அதிகரிக்கிறது. எனவே, ஒன்றிய மோடி அரசு, இந்த விசயத்தில் தலையீடு செய்து, படகுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களின் தொடர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்திய-இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகள், மீனவர்கள் சங்க பிரதிநிதிகளு டன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வை ஏற்படுத்திட வேண்டும். மேலும் சிறையில் வாடும் மீனவர்கள் குடும்பங்களுக்கு தினசரி நிதி உதவியை காலதாமதம் இல்லாமல், தற்போது வழங்கும் நிதி உதவியை தமிழ்நாடு அரசு அதிகரிக்க வேண்டும்’’ என்று கூறினார்.