districts

img

அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் நடத்திய போராட்டம் வெற்றி

விருதுநகர், செப்.14- அங்கன்வாடி மையங் களில் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்துவதைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் நடத் திய போராட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்  தில் உள்ள அனைத்து அங் கன்வாடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக் களைப் பொருத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்  றும் குழந்தைகள் வந்து செல்  லக் கூடிய அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்து வதைக் கைவிட வேண்டு மென வலியுறுத்தி புதனன்று  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்  கம் (சிஐடியு) சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் நள்ளி ரவு வரை நீடித்தது. பின்பு,  நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், அங்கன்வாடி மையங்க ளில் கண்காணிப்பு கேமரா  பொருத்தும் பணி நடை பெறாது என மாவட்ட ஆட்சி யர் அறிவுறுத்தலின் பேரில்  திட்ட அலுவலர் எழுத்துப் பூர்வமான உறுதிமொழியை சங்க நிர்வாகிகளிடம் வழங்கி‘னார்.  இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா கூறுகையில், ‘‘சிஐடியு-அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர் சங்கத்தின் உறுதி மிக்க போராட்டம் வெற்றி  பெற்றுள்ளது, போராட்டத் தல் கலந்து கொண்ட அனை வருக்கும் சிஐடியு விருது நகர் மாவட்டக் குழு சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். போராடும் ஊழியர் களை, தொழிலாளிகளை ஒற்  றுமைப்படுத்துவதன் மூல மும், சங்க வித்தியாசமின்றி  வர்க்க உணர்வோடு போரா டக்கூடியவர்களை செங் கொடி பேரியக்கத்தோடு  இணைப்பதன் மூலம்  அனைத்து  கோரிக்கைகளை யும் வென்றெடுக்க முடியும் என இப்போராட்டம் நிரூ பித்துள்ளது. இது எதிர்காலத்தில் அனைத்து தொழிலாளர் இயக்கத்தின் போராட்டத் திற்கும் உந்து சக்தியாகவும் முன்னுதாரணமாகவும் திக ழும்’’ என்றார்.