விருதுநகர், செப்.13- கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் வருகை தரும் அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்து வதைக் கண்டித்து சிஐடியு-தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்தர்ராணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாண்டியம்மாள் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செய லாளர் டெய்சி துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா மற்றும் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராள மான அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த மாவட்ட நிர்வா கம் முயற்சி செய்து வருகிறது. பொதுவாக அங்கன்வாடி மையங் களுக்கு கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் வந்து செல்கின்றனர். எனவே, கண்காணிப்பு கேமரா பொருத்தும் முடிவை கைவிட வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஆக.,31 அன்று அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆட்சியர் அலு வலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கேமராக்கள் பொருத்தும் பணி நிறுத்தி வைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், கொடுத்த வாக்குறு தியை மீறி மீண்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.