மதுரை. அக் 27- மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட சேக்கிபட்டி, அய்யாபட்டி, திருச்சுனை ஆகிய கிராமங்களில் கிரானைட் குவாரி அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்யக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரண்டாவது நாளான வெள்ளியன்று நடைபெற்ற போராட்டத்தில் மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு, மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘‘இங்கு 3 இடங்களில் குவாரி கள் அமைப்பதால் இயற்கை வளங்கள், குடிநீர் வாய்க்கால்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. கிரானைட் குவாரி திறப்பது குறித்து தமிழ்நாடு முதல்வரின் கவ னத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு ஏற்பட முயற்சி களை மேற்கொள்வேன்’’ என்று கூறினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன் தாலுகா குழு உறுப்பினர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.