districts

img

தேனியில் ரத்த தானம் செய்த மாணவர்கள்

தேனி ,ஜன.28-   இந்திய மாணவர் சங்கத்தின் 52வது அமைப்பு தினம் மற்றும்  73  ஆவது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு 20 க்கும் மேற்பட்ட மாண வர்கள் ரத்த தானம் செய்தனர் . நிகழ்வில் ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றி தழ் ,பதக்கம் ,ரத்ததான கொடையா ளர்கள் அடையாள அட்டை ஆகிய வற்றை  இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி . மாரி யப்பன்  வழங்கினார் .நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் .வேல் பிரகாஷ்,மாவட்டத் தலைவர் டி . நாகராஜ் ,ரத்த வங்கி மருத்துவர் அனு மந்தன் ,சங்க மாவட்ட நிர்வாகிகள் எம். சண்முகசுந்தரம் எஸ் .சாய் ஸ்ரீநாத் மாவட்டக்குழு உறுப்பினர்கள் விஷ்வா,சேகுவேரா. மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்  கருத்தரங்கம் . புதிய கல்விக் கொள்கைக்கு எதி ராக கல்வி நிலையங்களில் மாண வர்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்க தனி சட்டம் இயற்ற கோரி  கருத்த ரங்கம் நடைபெற்றது.இந்திய குடி யரசு அணிவகுப்பில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசை கண்டித் தும் சுதந்திர போராட்ட தியாகிகள் உடைய உருவ படங்களுடன் ஊர்வ லம் நடைபெற்றது .பின்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சட்டத் தின் முகப்புரை உறுதிமொழி எடுக் கப்பட்டது .நிகழ்ச்சிக்கு  மாவட்டத் தலைவர் டி . நாகராஜ் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் வி. மாரியப்பன்  கருத்துரை வழங்கி னார்.