சிவகங்கை, ஆக.12- சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியின் 75-வது ஆண்டு பவள விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக் குடி), செந்தில்நாதன் (சிவகங்கை) ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மேதகு இளைய மன்னர் மகேஷ்துரை, சிவ கங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் ஆகியோர் துவக்கி வைத்த னர். கல்லூரி முதல்வர் முனைவர் துரை யரசன் வரவேற்று பேசினார். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பவள விழா மலரினை வெளியிட்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பேசுகையில், சிவகங்கை மன் னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி யானது, இந்தியா சுதந்திரம் பெற்ற போது அதே ஆண்டில், சமதர்ம வாழ் விற்கு கல்வி ஒன்றே அடிப்படை என்ற உயரிய எண்ணத்திலும், அழியா செல்வ மான கல்வியை எதிர்கால சந்ததி யினர்களுக்கு வழங்கிட வேண்டும் என்ற அடிப்படையிலும் மன்னர் அவர் களால் உருவாக்கப்பட்ட கல்லூரியா கும். அச்சமயம் முதல் பொதுமக்களின் பேராதரவுடன் சிறப்பாக இயங்கி வரு கிறது. படிப்படியாக பல்வேறு வளர்ச்சி யை பெற்று தற்போது 3800 மாணவர்கள் பயில்கின்ற அளவில் வளர்ச்சி அடைந் துள்ளது. இக்கல்லூரியில் பயின்ற வர்கள் தற்போது பல்வேறு துறைகளில் சிறப்பு மிக்கவர்களாக திகழ்ந்து வரு வது குறிப்பிடத்தக்கதாகும். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தினை உருவாக்குவதற்கு கல்வி என்பது பெரும் பங்கு வகிக்கிறது.
அப்படிப் பட்ட கல்வியினை மாணாக்கர்கள் தர மான முறையில் பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் வழங்கி வருகிறார்கள். கல்லூரியின் சார்பில் கூடுதல் அரங்கம், குளிர்சாதன வசதி, கணினி வசதிகள், முகப்பினை பழமையான வடிவிலேயே புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இக்கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அரசின் கவனத்திற்கு அதனை எடுத்துச் சென்று துறை ரீதியாக, படிப்படியாக அக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். இவ்விழாவில் மதுரை மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) பொன்முத்துராமலிங்கம், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் .சுகிதா மற்றும் துறைத்தலைவர்கள், மாணவ மாணவியர்கள், முன்னாள் மாண வர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். சிவகங்கை மன்னர் கல்லூரி மாண வர் முன்னாள் தலைவரும், திமுக நகர் செயலாளருமான பொன்னுச்சாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில நிர்வாகி பேராசிரியர் ராஜ மாணிக்கம், தமிழாசிரியர் இளங்கோ, நல்லாசிரியர் கண்ணப்பன், சேது பாஸ்கரா உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி விழா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.