districts

img

நில எடுப்பு ஒருங்கிணைப்புக்குழு சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்

காரியாபட்டி, ஜூன்.17- தமிழ்நாடு அரசு கொண்டு வந்தள்ள புதிய  நில எடுப்பு ஒருங்கிணைப் புக் குழு சட்டத்தை உடனடி யாக வாபஸ் பெற வேண்டு மென வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காரியாபட்டி, ஏழாயிரம் பண்ணையில் பொது மக்க ளிடம் கையெழுத்து இயக் கம் நடத்தினர். காரியாபட்டி பேருந்து  நிலையம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வி.முருகன் தலைமையேற்றார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் ஏ.அம்மாசி துவக்கி வைத்தார். மேலும் இதில், விவசாயத் தொழிலா ளர் சங்க ஒன்றிய செயலா ளர் மலைச்சாமி, சிவபாக்கி யம், பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர். ஏழாயிரம்பண்ணையில் மாவட்டத் தலைவர் அ. விஜயமுருகன் தலைமை யேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சுப்பாராஜ், மாவட்ட பொருளாளர் மனோஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.