சின்னாளப்பட்டி, ஏப்.23- திண்டுக்கல் மாவட்டம் - ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஆர்.வி.எஸ் பத்மா வதி தோட்டக்கலை கல்லூரி - நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் (75க்கும் மேற்பட்ட) தூய்மை பணியில் ஈடுபட்டு மருத்துவமனை வளாகங்களை சுத்தம் செய்தனர். ஆத்தூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர்.எல்.அரவிந்த் நாராயணன் தலைமை வகித்து துவங்கி வைத்தார். மருத்துவமனை வளா கங்களை சுற்றி நடுவதற்கான மரக்கன்று களை ‘சி” அமைப்பு மற்றும் அச்சாணி அமைப்புகளை சேர்ந்த ஆசிரியர் சோ.ராமு, ஆ.கருப்பையா, வ.அழகர்சாமி ஆகியோர் வழங்கி நடுவதற்கான பணிகளையும், ட்ராக்டர் ரொடேட்டர் மூலம் தூய்மை செய்யும் பணிகளையும் மேற்கொண்டனர். ஆர்.வி.எஸ் கல்லூரியின் சார்பில் முனைவர் அமிர்தலிங்கம், முனைவர்.புனித வதி ஆகியோர் ஒருங்கிணைப்பு பணி களை செய்தனர்.