பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல், குடும்ப வன்முறைக்கு எதிராக செவ்வாயன்று (ஜூலை 19) சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.கே.ஷலைஜா, பி.சம்பத், உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், மதுக்கூர் ராமலிங்கம், கே.பாலபாரதி, திராவிடர் கழக பிரச்சார செயலாளர் அருள்மொழி, திரைக்கலைஞர் ரோகிணி,சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தர்ராஜன் (வடசென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.