ஒட்டன்சத்திரம், செப்.1- ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி தலைமை ஆசிரி யர் ஜான் வில்பர் பொன் ராஜ் தலைமையில் வெள்ளி யன்று நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் செல்விசெல்ல முத்து முன்னிலை வகித்தார். திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் கல்லூரி தொழில்நுட்ப கல்லூரி கணினிப்பயன்பாடு முதுகலை துறைத்தலைவர் ஜெகநாதன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மரு.கோபிகிருஷ்ணராஜா, ஊராட்சி மன்றத்தலைவர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞா னிகளால் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் விண்கலம் நிலவில் தரை யிறங்கியது போல அறிவி யல் கண்காட்சி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரி யர்கள் மெகா சைசில் செட்டிங் அமைத்து இருந் தது அனைவரையும் கவர்ந்தது. இதை பொது மக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று பார்வை யிட்டனர். அதே போல பேரிடர் மேலாண்மை, நீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, அறிவியல் தத்துவங்கள், காற்றாலை மின்சாரம் தயாரிப்பு மற்றும் இயற்கை உணவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் படைப்புகளை மாணவ, மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர்.