சிவகங்கை, ஜன.25- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அப்துல்லா மிஷன் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் சபீர் அப் துல்லா கூறியதாவது: நமது உடலில் இயற்கை யாகவே மறைந்துள்ள சில மர்ம புள்ளிகள் சீர்கெடுவதால் உடலில் நோய்கள் ஏற்படுகின்றன . அந்த மர்ம புள்ளி களை கண்டறிந்து அவற்றை சிறு ஊசிகள் துணைகொண்டு மருந்து இல்லாமல் தூண்டி அவற்றை இயக்க வைத்து குணமாக்குவது அக்கு பங்சர் ஆகும். நமது உடலில் 14 வித மான சக்தி ஓட்டப்பாதைகள் உள்ளன . ஒன்றுக்கொன்று அனுசரித்துச் செல்லும் வரையில்உடலில் நோய் ஏற்படாது. இவற் றில் முரண்பாடு ஏற்பட்டால் நோய் ஏற்படும். பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது . செயற்கை யான கருவிகள் இல்லாமல் அதிக செலவு கள் இல்லாமலும் சில நிமிடத்திலேயே ஒரு வரின் உடலில் எந்த உறுப்பு பாதித்துள்ளது என்பதை ஒரு பகுதியின் கண்ணின் கரு விழிப் படலம் மூலம் கண்டறிந்து விடலாம். சிறுநீரக கோளாறுகள், இதய கோளாறுகள், ரத்த ஓட்டம் மண்டலத்தில் பாதிப்பு, கருப் பைக் கோளாறுகள், தோல் பாதிப்பு, கால் பிடிப்பு காரணம் ஆகியவற்றை கருவிழிப் படலத்தின் மூலமாக கண்டறிந்து அவர் களுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.