districts

img

தூய்மைப் பணியாளர்கள் மனு கொடுத்து முறையிடும் போராட்டம்

தென்காசி, ஜுலை 1 தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு சிஐடியு தூய்மை பணியாளர்கள்,  தூய்மை காவலர்கள் முறையிடும் போராட் டம் நடைபெற்றது.   காலமுறை ஊதியம், பணிக் கொடை 5 லட்சம், கொரோனா நிவாரண நிதி ரூ.15000, பணி செய்ய போதுமான உபகரண பொருட்கள் வழங்க வேண்டும், பணி பதிவேடு, சர்வீஸ் புக் போடுவது, 7 ஆவது ஊதி யக்குழு நிலுவைத்தொகை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு  தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழி யர்கள் சங்கம் சார்பில் மனு கொடுத்து முறையிடும் போராட்டம் மாவட்டத் தலைவர் எம்.வேல்முருகன் தலை மையில் நடைபெற்றது. சிஐடியு தென்காசி மாவட்டத் தலைவர் எஸ்.அயுப்கான் துவக்கி வைத்தார்.  விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர்  வெங்கடேஷ்  சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் என்.லெனின்குமார், ஏ.குருசாமி, ஏ.மகாவிஷ்னு,  சிபிஎம் தாலுகா செயலாளர்கள் இ.பாலு, வாசு நட ராஜன்,   தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, செங்கோட்டை சங்கர் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து சங்கத்தின் மாநிலப் பொரு ளாளர் பி.பாலசுப்பிரமணியன் பேசி னார். போராட்டத்தில்  250 பெண்கள்  உள்பட 300 துய்மைப் பணியாளர் கள், தூய்மைக் காவலர்கள் பங்கேற்றனர். கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் கொடுத்து சங்க நிர்வாகிகள் பேசினர்.

;