திருநெல்வேலி ,ஜன. 13- நெல்லை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் பொங்கல் பண்டி கையையொட்டி 80 டன் காய்கறிகள் விற்பனையானது. தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளை அவர்களே சந் தைப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இந்த உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு தனித்தனி யாக கடைகள் அமைத்து கொடுக்கப் பட்டுள்ளது. அந்த கடைகளில் விவசாயி கள் தாங்கள் விளைவித்த காய்கறி களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். விவசாயிகள் கொண்டு வரும் காய் கறிகளுக்கு உழவர் சந்தை நிர்வாக அலு வலர் தினமும் காய்கறி மார்க்கெட் நில வரத்தின்படி விலை நிர்ணயம் செய்வார். நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படும். இதனால் விவசாயிகள், காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் பலன் அடைந்தனர். 80 டன் விற்பனை நெல்லை மாவட்டத்தில் பாளை யங்கோட்டை மகாராஜநகர், மேலப் பாளையம், டவுன் கண்டியப்பேரி, அம்பை ஆகிய 4 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த உழவர் சந்தைக்கு நெல்லை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளை வித்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டி கையை யொட்டி உழவர் சந்தைகளில் காய்கறிகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இந்த 4 உழவர் சந்தை களிலும் மொத்தம் 80 டன் காய்கறிகள் விற்பனையானது. அதாவது ரூ.29 லட்சம் வரை காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.