districts

img

கராத்தே போட்டியில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி, டிச. 15 கன்னியாகுமரி மாவட்டம், திருத்துவபுரத்தில் சோபுகான் இன்டர்நேஷனல் கராத்தே அசோசியேசன் சார்பாக 18-ஆவது நேஷனல் ஓபன் கராத்தே சாம்பி யன்ஷிப் போட்டி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 500 பேர் கலந்து கொண்டனர்.  இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  கிரியேடிவ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாவட்டத்தைச் சேர்ந்த 27 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.  இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற 27 மாணவ- மாணவிகள், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவ ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை எஸ்.பி. பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது கிரியே டிவ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பயிற்சி யாளர்கள் மணி கண்டன், மரிய இக்னேசியஸ் ஜோ ஆகியோர் உடனி ருந்தனர்.