districts

img

சு.வெங்கடேசன் எம்.பி., நிதி ரூ.40 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு போட்டித் தேர்வு நூல்கள் வழங்கும் நிகழ்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்

மதுரை, ஜூன் 16- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.  வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சத்தில் போட்டி தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பயன்பெறும் வகை யில் போட்டித் தேர்வு நூல்கள் வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கின்றார். இதுகுறித்து ஜூன் 16 வியாழனன்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவல கத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., செய்தியாளர்  களிடம் கூறியதாவது: போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிற மாண வர்களுக்கு உரிய நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சில முயற்சி களை எடுத்திருக்கிறோம். குறிப்பாக சம வாய்ப்புகளின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுவதுதான் சரியாகவும் நியாயமாக வும் இருக்கும். ஆனால் இன்றைய தினம்  போட்டித் தேர்வுகளில் அனைத்து மாணவர் களுக்கும் சம வாய்ப்புகள் இருக்கிறதா? என்  பது ஒரு பெரிய கேள்வி. குறிப்பாக படிப்பதற்குரிய வாய்ப்பு, சரி யான கருவி நூல்கள் கிடைக்கிறதா? என்றால்  நகர்ப்புற கோச்சிங் சென்டரில் இருக்கும்  மாணவர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பு, எல்லா மாணவர்களுக்கும் கிடைப்பதில்லை. சில நூல்களைத்தான் கை மாற்றி படிக்கிற சூழல் பொதுவாக எல்லா இடங்களிலும் பார்க்க முடி கிறது. போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கும் எழுதுவதற்குமான வாய்ப்பு கிராமப்புற மாண வர்களுக்கு இன்னும் அரிதாக இருக்கிறது.  இந்த நிலையெல்லாம் கணக்கில் கொண்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முதல் முறையாக ஒரு முக்கியமான முயற்சியை மேற்கொண்டு இருக்கிறோம். 

85 நூலகங்களுக்கு 164 நூல்கள் கொண்ட தொகுப்பு 
போட்டித்தேர்வுகளுக்கான அனைத்து கருவி நூல்களையும் அனைத்து நூலகங்க ளுக்கும் வழங்குவது என்ற அடிப்படையில்  மதுரை மாவட்டத்தில் இருக்கிற மாவட்ட மைய நூலகம், முழு நேர நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், மற்றும் கிளை நூல கங்கள் என்று பல அடுக்குகளில் இருக்கிற  85 நூலகங்களுக்கும் போட்டித் தேர்வுகளுக் காக 164 நூல்கள் கொண்ட தொகுப்பு வழங்  கப்பட உள்ளது. இந்த தொகுப்புகளில் மொத்தம் 13 ஆயி ரம் புத்தகங்கள் அடங்கும். அனைத்து நூல கங்களுக்கும் தனியான இரும்பு புத்தக அடுக்குகள் வாங்கப்பட்டு இந்த நூற்கள் அத்துடன் இணைத்து வழங்கப்பட இருக்கி றது. இந்த நிகழ்வை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 17 வெள்ளியன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்திலி ருந்து காணொலி வாயிலாக துவக்கி வைக்க  இசைந்திருக்கிறார். முதலமைச்சருக்கு எனது  நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள் கிறேன்.  முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயி லாக துவக்கி வைக்கும் நிகழ்வை முன்னிட்டு மதுரை மாவட்ட மைய நூலகத்தில் அமைச்சர்  கள், ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்  கள், மேயர், துணை மேயர் அனைவரும் பங்  கெடுத்து சிறப்பிக்க இருக்கின்றனர்.

அடுத்த ஆண்டு வங்கித்தேர்வுக்கான புத்தகங்கள்
மேலும் இந்த புத்தகங்களின் தொகுப்பு என்பது 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை  இருக்கும். இதில் அனைத்து வகையான  போட்டித்தேர்வுக்கான புத்தகங்களும் இருக்கும். இதேபோல் அடுத்த ஆண்டு வங்கி தேர்வுக்கான புத்தகங்கள் வாங்கு வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதே போல் இந்த புத்தகங்களை பராமரிப்ப தற்கான ரேக்குகள் தனியாக இந்த நிதியிலி ருந்து வாங்கப்படும். மேலும் இது மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 85 நூல கங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதே போல் பல்வேறு நூலகங்களில் போதிய இட வசதி இல்லை. ஆகவே தான் இது போன்ற நூல்களை வைப்பதற்கு ரேக்குகள் வாங்கி கொடுக்கப்படுகிறது. ஏனெனில் கிராமப்புற நூலகங்களில் இட வசதி என்பது மிகப் பெரும் சவாலாகவே உள்ளது. எனவே இது  போன்ற கட்டமைப்பு வசதிகளை அரசு  மேம்படுத்த வேண்டும் என்பதை இந்நேரத் தில் கூறிக்கொள்கிறேன் என்றார். மதுரையில் போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மாநகராட்சி வளாகம் மற்றும் பூங்கா போன்ற இடங்களில் அமர்ந்து படிக்  கக்கூடிய சூழ்நிலை உள்ளது. அதற்கு மாற்று  ஏற்பாடு செய்யப்படுமா என்ற கேள்விக்கு. மதுரை உலகத் தமிழ்ச் சங்க கட்டிடம் அரு கில் ஒரு பூங்கா அமைக்கப்பட உள்ளது. அங்கு இதுபோல் போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கான ஏற்பாடு கள் செய்யப்பட உள்ளது. அதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட உள்ளது. அதேபோல் மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூல கத்தில் சென்னை அறிஞர் அண்ணா நூற் றாண்டு நூலகத்தை போல் போட்டித் தேர்  வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு வசதிகள்  செய்யப்பட உள்ளது. தேர்தல் நேரத்தில் நாங்  கள் கூறியிருந்தோம். போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகை யில் அந்த ஏற்பாட்டினை செய்து கொடுப் போம் என்று தெரிவித்தார். இச்சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய் உடனிருந்தார்.

;