districts

img

திண்டுக்கல் அருகே சேவல் கண்காட்சி

சின்னாளப்பட்டி, ஜன.25- திண்டுக்கல்லை அடுத்த குட்டியபட்டியில் அகில இந்திய சேவல் வளர்ப்பு நலச்சங்கம் சார்பாக 8 ஆம்  ஆண்டு கிளி மூக்கு மற்றும் விசிறிவால் சேவல் கண்காட்சி  நடைபெற்றது.  அழிந்து வரும் சேவல் இனத்தை பாதுகாக்கும் வகை யில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழகம் முழுவதும் இருந்தும் 400-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.  கிளி மூக்கு சேவல், விசிறிவால் சேவல் , மயில்  சேவல், காகம் கொன்றை, கீரி உள்ளிட்ட பல்வேறு வகை யான சேவல்கள் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு சேவலும் 5 முதல் 8 கிலோ வரையிலான எடை கொண்டி ருந்தது. ஒரு சேவல் மூன்று லட்சம் ரூபாய் வரையில் விலை போனது. இந்த சேவல் கண்காட்சியை காண்ப தற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏரா ளமானோர் வந்திருந்தனர். கண்காட்சிக்கு வந்தவர் களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.