மதுரை ஜன 6- சாலைப் பணியாளர்க ளின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், பணிக்காலத்தில் இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியம னம் வழங்க வேண்டும். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்க ளுக்கு பணி வழங்க வே ண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் தலையில் முக்காடு போட்டு நூதனப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலை வர் த.மனோகரன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் க.நீதிராஜா துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் வே. சோலையப்பன் கோரிக்கை களை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் இணைச் செயலாளர் பரமசிவன் ஆதரித்துப் பேசினார். மாநிலப் பொருளாளர் இரா.தமிழ் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் நா.முருகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.