districts

img

சாலைப்பணியாளர்கள் பட்டை நாமம் போராட்டம்

மதுரை, மார்ச் 11-  சாலைப்பணியாளர்களின் 41 மாத  பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்தி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் கள் பட்டை நாமம் போட்டு தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைப்பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்கான ஊதிய மாற்றம் ரூ.5200, ரூ.20200, தர ஊதி யம் ரூ.1900 வழங்க வேண்டும். பணிநீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்த வர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்ப டையில் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை கண்காணிப்புப் பொறியாளர் அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் த. மனோகரன் (மதுரை), ஆர்.ராஜா (திண்டுக்  கல்), ஆர்.மாரி (சிவகங்கை) டி.நந்தகோபால் (பழனிகோட்டம்),  டி.நந்தகோபால் (இராம நாதபுரம்) ஆகியோர் தலைமை வகித்தனர்.   மாநிலச் செயலாளர் கோ. ஹரி கோபால கிருஷ்ணன் துவக்கி வைத்துப் பேசினார்.  மாவட்டச் செயலாளர்கள் வே.சோலை யப்பன் (மதுரை), சி.சீனிவாசன் (திண்டுக் கல்), சி.முத்தையா (சிவகங்கை), ஆர்.முரு கேசன்(தேனி), எம்.மணிமாறன்(பழனி) க. திருகண்ணன் (இராமநாதபுரம்) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச்செயலாளர் க.நீதி ராஜா, சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் இரா.தமிழ் ஆகியோர் ஆதரித்துப் பேசினர்.  சங்கத்தின் மாநிலத் தலைவர் மா. பாலசுப்பரமணியன் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் நா.முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.