districts

img

மேகமலை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த அரிசிக் கொம்பன் யானை

தேனி, மே 28- கம்பம் நகருக்குள் புகுந்து மிரட்டிய அரிசிக்கொம்பன் யானை  ஞாயிறன்று மேகமலை வனப்பகு தியில் நுழைந்தது. இருப்பினும் நகருக்குள் மீண்டும் வந்தால் அவற்றைப்பிடிக்கவும், காட்டுப் பகுதிக்குள் விடுவதற்கு 3 கும்கி யானைகள், மருத்துவக்குழுக்கள் கம்பம் வரவழைக்கப்பட்டுள்ளது. யானையை பிடிப்பது தொடர்  பாக வனத்துறை அமைச்சர் மதி வேந்தன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் வனம் மற்றும் காவல்  துறை அதிகாரிகளுடன் ஆலோ சனையில் ஈடுபட்டனர்.  இடுக்கி மாவட்டம் சின்னக்கா னல், தேவிகுளம் ,சாந்தன்பாறை ,வட்டக்கானல் வனப்பகுதி அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக அரிசிக்கொம்பன் என்னும் காட்டு யானை சுற்றித்திரிந்தது. இதனைத் தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி கடந்த ஏப்ரல் 29 ஆம்  தேதிதமிழக எல்லையான பெரி யார் புலிகள் சரணாலய பகுதி யில் விடப்பட்டது. கண்ணகி கோயில், மேகமலை,  லோயர்கேம்ப் உள்ளிட்ட பகுதி களுக்கு இடம்பெயர்ந்த இந்த யானை சனிக்கிழமை கம்பம் நக ருக்குள் புகுந்தது. தெருக்களில் சுற்றித்திரிந்த இந்த யானையைப் பார்த்து பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம்பிடித்தனர். இவர்களின் கூச்சலால் அரிசிக்கொம்பன் மேலும் மிரண்டு ஓடியது.இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் பாது காப்பு கருதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் யானையை பாது காப்பாக வனப்பகுதிக்குள் அனுப்புவது குறித்து மாவட்ட நிர்வாகம் தலைமையில் பல்  வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.ஊரக வளர்ச்  சித்துறை அமைச்சர் இ.பெரிய சாமி, வனத்துறை அமைச்சர் மதி வேந்தன் ஆகியோர் கம்பத்தில் முகாமிட்டு இப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

கும்கி யானை வருகை 

அரிசிக் கொம்பன் யானை யினை பிடிப்பதற்கு மூன்று கும்கி  யானைகள் கம்பம் நகருக்கு வந்துள்ளன. கோவை மாவட்டம் டாப்சிலிப்பில் கோழிகமுதி என் னும் இடத்தில் இருந்து சுயம்பு (வயது 25) முத்து (வயது 23) ஆகிய இரண்டு கும்கி யானைகள் புறப்பட்டு,மே 28 ஞாயிறன்று காலை கம்பம் நகர் வந்துள்ளது. அது போன்று கூடலூர் முது மலை தெப்பக்காட்டில் இருந்து உத யன் (வயது 25) மக்கன்னா கும்கி  யானையும் கம்பம் வந்து சேர்ந்துள்  ளது. மூன்று கும்கி யானைகளும்  கம்பம் நகரில் கம்பம் கூடலூர் சாலையில் புளியம் தோப்பில் கட்டி  வைக்கப்பட்டுள்ளது.

மேகமலையில் அரிசிக்கொம்பன் 

ஞாயிறன்று அதிகாலையில் அரிசிக்கொம்பன் யானை மெல்ல இடம் பெயரத் தொடங்கியது. சுருளிப்பட்டி, கூத்தனாட்சி ஆறு வழியே நடந்து மேகமலை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இருப்பினும் மீண்டும் யானை  நகருக்குள் வருவதைத் தடுப்ப தற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்  டுள்ளன. இதற்காக வனத்துறை யினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சாட்டிலைட் ரேடியோ காலர் சமிக்ஞை மூலம் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

அமைச்சர் மதிவேந்தன் பேட்டி 

கும்கி மூலம் அரிசிக்கொம்பன் யானையைப் பிடிக்கவும் மயக்க  ஊசி செலுத்தவும் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இருப்பி னும் மேகலைக்குள் அரிசிக் கொம்பன் யானை சென்றுவிட்டது. மீண்டும் நகருக்குள் வந்தால் அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளுடன் குழுவினர் உள்ளனர்.  யானைக்கு துப்பாக்கி வழியாக  மயக்க ஊசி செலுத்த கலைவா ணன் தலைமையில் டாக்டர்கள் பிரகாஷ், விஜயராகவன், ராஜேஷ்  உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழு வினர் உள்ளனர். அரிசிக்கொம் பன் யானையை பிடிப்பது ஒரு சவா லான காரியம் ஆனால் அதனை பிடிப்பதற்காக தமிழக வனத்துறை முழுவீச்சில் இறங்கியுள்ளது. காட்டுப்பகுதிக்குள் சென்றிருந்தா லும் யானையின் நடமாட்டத்தை நமது வனத்துறை கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்தார். 

அரிசிகொம்பன் தாக்கி சிகிச்சை  பெறும் நபருக்கு அமைச்சர் நிதியுதவி

தேனி மாவட்டம், கம்பம் நக ரில் குடியிருப்பு பகுதி யில் புகுந்த அரிசிகொம்பன் யானை அட்டகாசம் செய்தது. தெருக்களில் நிறுத்தி வைக்கப் பட்ட வாகனங்களை சேதபடுத்திய அரிசிக்கொம்பன் யானை, கம்பம் நகரில் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக பணியாற்றிய பால் ராஜ் என்பவரையும் தாக்கியது. படு காயமடைந்த பால்ராஜ் தேனி அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காயமடைந்த காவலாளி பால் ராஜை, தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோர் நேரில் சந்தித்து அவரது குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறினர். மேலும் பால்ராஜின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50 ஆயிரம் நிதியுதவி கொடுத்தனர். ஆட்டோ சேதத்திற்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கினர். இந்த நிகழ்வின் போது தேனி  மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா, ஆண்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பி னர் சரவணன், தி.மு.க மாவட்ட  செயலாளர்கள் கம்பம் ராம கிருஷ்ணன், தங்கதமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

;