districts

img

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு: உள்ளாட்சி தலைவியிடம் கிராம மக்கள் மனு

தூத்துக்குடி, மார்ச் 20- தூத்துக்குடி அருகே அல்லி குளம் பகுதியில் எண்ணெய் சுத்தி கரிப்பு ஆலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். இதுதொடர்பாக அல்லிகுளம் பஞ்சாயத்து தலைவியிடம் கிராம மக்கள் அளித்த மனு:  தூத்துக்குடி மாவட்டம் அல்லிக்குளம் பஞ்சாயத்தில் அல்லிக்குளம், திருவனந்தபுரம், ஆண்டாள்நகர், மற்றும் முருகன் நகர் ஆகிய கிராமங்களில் சுமார் 1500 குடியிருப்புகள் அமைந்துள் ளன. இதில் பெரும்பாலான குடும்பங்கள் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த கால்நடை வளர்ப்பு தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் சிப்காட் நிறு வனம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்காக இந்த கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசு உத்தேசித்தாக தெரியவரு கிறது. விவசாய நிலங்கள், கால்  நடை மேய்ச்சல் நடைபெறும் நிலங்களிலும் எண்ணெய் சுத்தி கரிப்பு ஆலை அமைந்தால் விவ சாயமும் அதை சார்ந்த கால்நடை  வளர்ப்பு மற்றும் கால்நடை மேய்ச்  சல், பால் வியாபாரம், விவ சாய பயிரிடும் தொழில்கள் பெரி தும் பாதிக்கப்படும். எனவே, எண்ணெய் ஆலை அமையும் இடத்தினை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.