வத்திராயிருப்பில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை
திருவில்லிபுத்தூர், மார்ச் 26- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் தென்னை விவசாயிகள் சங்க சிறப்பு பேரவை நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்தையா தலைமை வகித்தார். செயலாளர் காளிதாசன் முன்னிலை வகித்தார். தென்னை விவசாயி கள் சங்க மாநிலச்செயலாளர் அ.விஜயமுருகன் உரை யாற்றினார். இதில் சந்தையில் தேங்காய் விற்கும் போது விவசாயி களிடம் லாபக்காய் பெறுவதை தவிர்க்கும் பொருட்டு வத்தி ராயிருப்பு பகுதியில் அரசு கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். தேங்காய் கிலோவுக்கு ரூ.50 விலை நிர்ணயிக்க வேண்டும். வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140க்கு கொள்முதல் செய்ய வேண்டும். தென்னையை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவாடானையில் சிஐடியு, விவசாயிகள் பிரச்சாரம்
இராமநாதபுரம், மார்ச் 26- திருவாடானை பகுதியில் மக்கள் விரோத மோடி அர சைக் கண்டித்து ஏப்ரல் 5 அன்று நடைபெறும் தில்லி பேரணி யை விளக்கி சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடா னையில் நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது. திருவாடானை தியாகிகள் பூங்கா அருகில் தொடங் கிய நடைபயண பிரச்சார இயக்கத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்ஏ.சந்தானம், விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் இராமநாதன், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் அருள் ஆகியோர் தலைமை தாங்கி னர். சிஐடியு மாவட்ட செயலாளர் எம் சிவாஜி, விவசாயி கள் சங்க தலைவர் எம்.முத்துராமு, மாவட்ட செயலாளர் வி.மயில்வாகனன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.சேதுராமு ஆகியோர் பேசினர்.
செம்பட்டி அருகே விபத்தில் ஒருவர் பலி
சின்னாளப்பட்டி, மார்ச் 26 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் பைனான்சியர் பிரவின் (38). இவர் வத்தலக் குண்டுக்கு பணி சம்மந்தமாக காரில் வந்தபோது எதிரே வந்த வேன் மீது நேருக்கு நேராக மோதி கவிழ்ந்தது. இதில் பிரவின் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். வேனில் பயணம் செய்த சின்னாளபட்டியைச் சேர்ந்த பத்துக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். செம்பட்டி காவல்துறையினர் ஆத்தூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து செம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான் மதகு அணையை உயர்த்தி கட்டக்கோரி ஆட்சியரிடம் சிபிஎம் மனு
மதுரை, மார்ச் 26- மதுரை மாவட்டம் சோழவந்தான், திருவேடகம் தேனூர், பரவை சமயநல்லூர் கண்மாய்கள் பாசன வசதி பெற்றிட கடத்த 15 ஆண்டுகளுக்கு முன் வைகை யில் சோழவந்தானில் மதகு அணை கட்டப்பட்டது.. இந்த அணை இன்னும் காட்சிப் பொருளாகவே உள்ளது. பாசன கால்வாய் மேடாகவும், அணை தாழ்வாகவும் உள்ளது. இப்பகுதி விவசாயிகள் அணைமட்டத்தை உயர்த்தி (3 அடி) பாசன வசதியை ஏற்படுத்தக் கோரி பல முறை மனுக்கள் கொடுத்தும். போரட்டங்கள் நடத்தி யும் பலனில்லாமல் உள்ளது. எனவே மேற்கண்ட 5 ஊர்களின் பாசனம் மற்றும் குடிநீர் வேளாண் விளை பொருளுக்கு ஆதாரமாக விளங்கும் சோழவந்தான் மதகு அனைபை 3 அடி உயர்த்தி கட்டி நிரந்தர பாசன வசதி பெற்றிட உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.நாகேந்திரன் வலியுறுத்திப் பேசினார். பின்னர் இக்கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்தார்.
ஏப்ரல் 5 தில்லி பேரணி விளக்கப் பிரச்சாரம்
திருவட்டார், மார்ச் 26- ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர், விவசாயி கள்,விவசாய தொழிலாளர் களின் விரோத போக்கை கண்டித்தும் ஏப்ரல் 5 ல் தில்லி நாடாளுமன்றம் நோக்கி நடைபெறும் பேரணி குறித்தும் திருவட்டார் வட்டாரக் குழு சார்பில் பிரச்சார பயணம் நடைபெற்றது. குட்டக்குழி சந்திப்பில் இருந்து விவசாயிகள் சங்கத்தின் வட்டார துணைத்தலைவர் சி.ஆர்.இராஜகுமார் தலைமையில் நடைபெற்ற பிரச்சார பயணத்தை சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்க மோகன் துவக்கி வைத்தார். இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சுந்தர்ராஜ்,விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் ரத் தின குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சுடுகாட்டிற்கு பாதை அமைக்கக் கோரி மதுரை ஆட்சியரிடம் சிபிஎம் மனு
மதுரை மார்ச் 26- மதுரை மாவட்டம் செல் லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கோவிலங்குளம் ஊராட் சிக்கு உட்பட்ட செல்லம்பட்டி வடக்கு காலனியில் வசிக் கும் மக்கள் அனைவரும் ரயில்வே பாதைக்கும் வடக்கு பகுதியில் உள்ள சர்வே எண் 313/2 இல் உள்ள ஓடை புறம்போக்கு இடத்தை சுடு காடாக பயன்படுத்தி வரு கின்றனர். மேற்படி ஊராட்சியை சேர்ந்த காந்திநகர் வழியாக செல்லுகிற ஓடை கரை வழி யாக இறந்தவர்களை எடுத் துச் சென்று அடக்கம் செய் வது வழக்கம். தற்போது பிற் படுத்தப்பட்டவர்கள் பயன் படுத்தும் சுடுகாடு வரை ஓடைக் கரையில் இறந்தவர் களை கொண்டு போக முடி யும். அதற்கு அடுத்தபடி யாக கிழக்கு பகுதியில் உள்ள தலித் மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டுக்கு இறந்தவர் களை கொண்டு போவதற்கு பாதை இல்லை .இறந்தவர் களை எடுத்துச் சென்று அடக் கம் செய்ய முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வா கம் உடனடியாக தலையீடு செய்து சுடுகாட்டுக்கு சாலை, சமுதாய கூடம் அடக்கம் செய்ய எரியூட்டும் மேடை ஆகிய வற்றை அமைத்திட போர்க் கால அடிப்படையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் வி.பி.முருகன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளார்.
ஏப்.30 மதுரையில் கூட்டுறவு ஊழியர் கோரிக்கை மாநாடு
மதுரை, மார்ச் 26- தமிழ்நாடு கூட்டுறவு சங்க ஊழியர் சம்மேளன (சிஐடியு) மாநில நிர்வாகக்குழு கூட்டம் சம்மேளன மாநிலத் தலைவர் ஆ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மதுரையில் ஞாயிறன்று நடைபெற்றது. சம்மேளன பொதுச் செயலாளர் என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம், சம்மேளன செயல் தலைவர் இரா.லெனின், சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கே ஆறுமுக நயினார். ஆகியோர் பங்கேற்றனர். இதில் கூட்டுறவு சங்க ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகளை விளக்கி தமிழகம் முழுவதுமிருந்து ஊழியர்கள் பங்கேற்கும் வகையில் கோரிக்கை மாநாடு வரும் ஏப்ரல் 30 அன்று மதுரையில் நடத்திட தீர்மானிக்கப்பட்டது . ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான ஒவ்வூதிய திட்டத்தை அரசு உருவாக்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தினை தனித் துறையாக உருவாக்கிட வேண்டும் . ஒன்றிய அரசு உருவாக்கிவரும் கூட்டுறவு சட்ட திருத்தம் கூட்டுறவு அமைப்பை சீர்குலைப்பதுடன் அரசின் உரிமைகளை பறித்திடவும் . சாதாரண ஏழை எளிய மக்களின் சேமிப்பு பணத்தை மடைமாற்றம் செய்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கிட எடுக்கப்படும் நடவடிக்கையினை நிறுத்த வேண்டும். ஆவின் நிர்வாகங்களின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் வன்மையாகக் கண்டிப்பதுடன், நீதிமன்ற உத்தரவுப்படி மேற்படி பணியாளர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். விதிப்படி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் வரையில் கூட்டுறவு நிறுவனங்களின் தேர்தலை தள்ளிப்போடவும் குழுவின் இடத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகளை செயலாட்சியர்களாக நியமித்திடவும் முயற்சி நடப்பதாக தெரிகிறது . இது கூட்டுறவு நிறுவனங்களில் ஜனநாயத்தை வளர்த்திட உதவி செய்யாது . எனவே நிர்வாகக்குழு பதவி காலம் முடிவடையும் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் உடனடியாக ஜனநாயகபூர்வமாக தேர்தலை நடத்திட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெல்லையில் 3 நாட்களில் 5 ஆயிரம் பாட்டில்கள் சேகரிப்பு
திருநெல்வேலி, மார்ச் 26- நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலை களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்படுவதால் நீர்நிலை கள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறியிருந்தனர். இதற்கு நிரந்தர தீர்வு காணுவது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சுகாதா ரத்துறை அலுவலர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் முறையாக டவுன் மண்டலத்தில் காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த 23-ந்தேதி தொடங்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் அதிகம் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும், நீர் நிலைகளை பாது காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டமானது தமிழ கத்தில் நெல்லை மாநகராட்சியில் முதல் முதலாக தொடங் கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்டு இன்று வரை 3 நாட்களுக்குள் சுமார் 5 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டமானது பொதுமக்க ளின் நலன் கருதி தொடங்கப்பட்ட திட்டம் எனவும், மக்களின் நிலை உயரவும் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுக்கு சில நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும் அதனை கருத்தில் கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு ஏற்ப நெல்லை யில் இந்த புதிய முயற்சி நடைமுறைக்கு கொண்டு வரப் பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தது ஒரு வாரத்திற்குள் ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிப்பது என்ற நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
6 தாசில்தார்கள் பதவி இறக்கம்; 11 பேருக்கு பதவி உயர்வு
திருநெல்வேலி, மார்ச் 26- நெல்லை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் துணை தாசில் தாராக பதவி இறக்கம் செய்யப்பட்ட நிலையில் 11 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்ட முத்திரைத்தாள் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தனித்தாசில்தாராக இருந்த ரகுமத் துல்லா, பதவி இறக்கம் செய்யப்பட்டு நெல்லை மாநக ராட்சி தேர்தல் துணை தாசில்தாராகவும், நெல்லை மாவட்ட முத்திரைத்தாள் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தனித் தாசில்தாராக இருந்த ஏசுராஜன், பதவி இறக்கம் செய்யப் பட்டு சென்னை-கன்னியாகுமரி தொழில் தடத்திட்ட நில எடுப்பு துணை தாசில்தாராகவும், சிப்காட் நில எடுப்பு தனித்தாசில்தார் சண்முக சுப்பிரமணியம் பதவி இறக்கம் செய்யப்பட்டு தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட துணை தாசில்தாராகவும், சிப்காட் நில எடுப்பு தனித்தாசில்தார் முருகேசுவரி பதவி இறக்கம் செய்யப்பட்டு வருவாய் நீதி மன்ற உதவி ஆட்சியர் அலுவலக கண்காணிப்பாளராக வும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 7 வருடம் கடுங்காவல் தண்டனை
தூத்துக்குடி, மார்ச் 26 தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மக ளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை கடந்த 4.3.2018 அன்று பாலியல் தொந்த ரவு செய்த வழக்கில் தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்த அய்யாக்குட்டி மகன் தங்கபாண்டி (61) யை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னதாய் புலன் விசாரணை செய்து கடந்த 31.05.2018 அன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்ற வாளியான தங்கபாண்டி என்பவருக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து சனிக்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
சேவை குறைபாட்டினை சுட்டிகாட்டி நிதி நிறுவனத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
நாகர்கோவில், மார்ச் 26- கன்னியாகுமரி மாவட்டம் வெத்திலைகோட்டையைச் சார்ந்த கிளிட்டஸ் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கினார். இதற்கான பணத்தை வட்டியும், அசலுமாக கடன் தொகை முழுவதையும் செலுத்திவிட்டார். ஆனால் தவணைகள் முடிந்த பிறகும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட வங்கிக் காசோலைகளை திரும்ப கொடுக்கவில்லை. அதை நிதி நிறுவனத்திடம் கேட்டபோது, அதனை நிதி நிறுவனம் வழங்கவில்லை. உடனடியாக நுகர்வோர் பாதுகாப்பு மையம் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மனஉளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர் வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் நிதி நிறுவனத்தின் சேவை குறை பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு காசோலைகள், ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மோடி அரசின் தாக்குதலைக் கண்டித்து திருவெறும்பூரில் பிரச்சாரம்
திருச்சிராப்பள்ளி, மார்ச் 26- மோடி அரசு மக்கள் மீது தொடுத்துவரும் பொருளா தார தாக்குதக் கண்டித்தும், எதிர்க்கட்சித் தலைவர்களின் குரல்வளையை நெறிக்கும் அடக்குமுறை மற்றும் அத்து மீறலைக் கண்டித்தும் சிஐடியூ, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் கள் சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திரு வெறும்பூர் ஒன்றியத்தில் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் அ.பழநிசாமி, மாவட் டத் துணைத் தலைவர் எஸ்.தெய்வநிதி, ஒன்றியத் தலை வர் பெரியசாமி, ஒன்றிய பொருளாளர் மகாலிங்கம், ஒன்றிய துணைச் செயலாளர் ராமமூர்த்தி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.நடராஜன், ஒன்றியத் தலைவர் கணேசன், ஒன்றியச் செயலாளர் குரு நாதன், சிஐடியு துணைத் தலைவர் அருணன், பிஎச்ஈஎல் பொதுச்செயலாளர் ஆர்,பரமசிவம், டி.குமரவேல், ஆர். செந்தில், எம்,இளையராஜா, பி.மகேந்திரன், கருணா நிதி ஆகியோர் பங்கேற்றனர்.
சிஐடியு நிர்வாகி பணி நிறைவு நிகழ்வு எஸ்.ஸ்ரீதர், ஆறுமுகநயினார் பங்கேற்பு
பெரம்பலூர், மார்ச் 26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் நகர் செயலாளரும், சிஐடியு மாவட்ட துணைசெயலாளரு மான ஆர்.சிவானந்தம் அரசு போக்குவரத்துகழக பெரம் பலூர் கிளையில் பணியாற்றி பணி நிறைவு பெற்றார். அவ ரது பணி நிறைவு பாராட்டு விழா பெரம்பலூரில் நடை பெற்றது. நிகழ்விற்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் டி. சீனிவாசன் தலைமை வகித் தார். பொருளாளர் ஆர்.சிங்க ராயர், எஸ்இடிசி திருச்சிராப் பள்ளி கே.ஜெயராமன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன், சம்மேள னப் பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், திருச்சிராப்பள்ளி மாவட்டச் செயலாளர் ராஜா, மாநகர் செயலாளர் பி. ரமேஷ், சிஐடியு மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ரெங்க ராஜன், எஸ்.அகஸ்டின் (பெரம்பலூர்), பி.துரைசாமி (அரியலூர்), கே.சிவராஜ் (திருச்சி புறநகர்), கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் என்.செல்லதுரை, அ. கலையரசி, ரெங்கநாதன், கோகுலகிருஷ்ணன், பி. கிருஷ்ணசாமி, எம்.கருணா நிதி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.