districts

img

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மாதர் மாநாடு கோரிக்கை

சாத்தூர், ஜூலை 4-  தமிழ்நாடு அரசு, மூவலூர் ராமா மிர்தம்மாள் திருமண உதவித்திட்  டத்தை மீண்டும் அமல்படுத்த வேண் டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் அதி காலையிலேயே பெண்களை வரவ ழைத்து வருகைப் பதிவேடு எடுத்து அலைக்கழிப்பு செய்வதை ரத்துச் செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் குடும்ப  வன்முறை குறித்து சிறப்பு விவாதம் நடத்த வேண்டும். மாவட்டத் தலைநக ரில் நடைபெற்று வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிகளை விரைவில் முடித்து மக்களின் பயன் பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். அறிவிக்கப்பட்ட பல் மருத்துவக் கல்லூ ரியை விருதுநகரில் உடனே தொடங்க வேண்டும். விருதுநகரில் பிஎஸ்சி நர்சிங் கல்லூரி, பாரா மெடிக்கல் கல்லூரி களை உடனே தொடங்க வேண்டும் என சாத்தூரில் நடைபெற்ற மாதர் சங்  கத்தின் 16 வது விருதுநகர் மாவட்ட  மாநாடு தமிழக அரசை வலியுறுத்தி யுள்ளது.  மாவட்ட மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் என். உமா மகேஸ்வரி, எம். ராணி ஆகியோர் தலைமை வகித்தார். சங்கக் கொடியை பி.அங்கம்மாள் ஏற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி. ரேணுகாதேவி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

வரவேற்புக் குழுத் தலைவர் கே. பாண்டீஸ்வரி வரவேற்புரை ஆற்றி னார். பல்வேறு துறைகளில் சாதனை  படைத்த பெண்கள் மற்றும் குழந்தை களை மாநிலச் செயலாளர் எஸ்.லட்சுமி பாராட்டி கௌரவித்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாநி லச் செயலாளர் எஸ் தமிழ்ச்செல்வி பேசி னார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் எஸ்.தெய்வானை, வரவு- செலவு அறிக்கையை மாவட்டப் பொரு ளாளர் எஸ்.அங்கம்மாள் ஆகியோர் சமர்ப்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். உஷா பாஷி, விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். பூங்கோதை, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.இராதா ஆகியோர் பேசி னர். மாநிலப் பொதுச் செயலாளர் பி சுகந்தி நிறைவுரையாற்றினார். நிர்வாகிகள் தேர்வு : மாவட்டத்தலை வராக எஸ்.தெய்வானை, செயலாள ராக என்.உமாமகேஸ்வரி, பொருளாள ராக எஸ்.அங்கம்மாள், துணைத் தலை வர்களாக எஸ்.லட்சுமி, ரேணுகா தேவி, சஞ்சீவிநாச்சியார், துணைச் செய லாளர்களாக மேரி, தங்கேஸ்வரி, இராஜேஸ்வரி உட்பட 25 பேர் கொண்ட  மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.  ஞாயிறு மாலை மதுரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேரணி நடை பெற்றது. அதைத்தொடர்ந்து வடக்கு ராதா வீதியில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. குழந்தைகளின் நடனம், சிலம்  பம், உள்ளிட்ட ஏராளமான கலை நிகழ்வு கள் நடைபெற்றன.