திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பேருராட்சி மன்றத் தலைவர் பிரதீபா கனகராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா, செயல் அலுவலர் செல்வராஜ் ,தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள்,கவுன்சிலர்கள்,அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத் தலைவர் சகீலா ராஜா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் முருகேசன், செயல் அலுவலர் சிவக்குமார் ,தலைமை எழுத்தர் துரைப்பாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம் என். பஞ்சம்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பாத்தி, துணைத் தலைவர் அருளானந்து, ஊராட்சி செயலர் பாலாஜி உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் .முன்னிலைக்கோட்டையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அந்தோணியம்மாள் , அலெக்ஸ், ஊராட்சி செயலர் சபீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இராஜபாளையம் கேசா மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா தலைவர் பானுபிரியா முன்னிலையில் பட்டயத்தலைவர் வைமா திருப்பதிசெல்வன் தலைமை ஏற்று கொடியேற்றினார்.
வைமா வித்யாலயாவில் குடியரசு தின விழாவில் பள்ளி முதல்வர் கற்பகலட்சுமி தேசியக் கொடி ஏற்றினார். வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர். வைமா திருப்பதி செல்வன்.மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முகவூர் செட்டியார்பட்டி பகுதியில் ஒன்றியத்தலைவர் சந்திரகுமார் தலைமையில் ஒன்றியச்செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இராமநாதபுரம், காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.ரூ. 96.88 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.