districts

img

சிறுவர் பூங்காவை சீரமைத்து திறந்திடுக!

மதுரை, டிச.21-   மதுரை 32 ஆவது வார்டுக்கு உட்பட்ட கோரிப்பாளை யம் பி.டி.ஆர் சாலையில் உள்ள மாநகராட்சி சிறுவர் பூங்காவினை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை செல்லூர் பகுதி குழு சார்பாக அப்பகுதி மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.  மக்கள் கையெழுத்துக்கள் அடங்கிய மனுவினை புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் தலைமையில் வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் டி. செல்வா, பொருளாளர் அ.  பாவேல் சிந்தன், மாவட்ட துணைத் தலைவர் வேல்தேவா, பகுதிக்குழு செயலாளர் இளையராஜா ஆகியோர்  மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் சரவண புவ னேஸ்வரியிடம் அளித்தனர்.