districts

img

தேனி, மதுரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

தேனி, ஏப்.22- இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகை யான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் தேனி ,போடி ,கம்பம் ,பாளையம் பெரியகுளம் ,சின்னமனூர் உள்ளிட்ட பல பகுதி களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ரம்ஜானை முன்னிட்டு உத்தமபாளை யத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.முன்ன தாக தேரடியில் இருந்து ஈத்கா மைதானம் வரை பேரணி நடைபெற்றது.பெரிய பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவர் தர்வேஷ் மைதீன் தலைமை வகித்தார்.கோட்டைமேடு, ஷாபிஈ, களிமேடுபட்டி, பி.டி.ஆர்.காலனி உள்ளிட்ட ஜமாத்  கமிட்டியினர், குழந்தைகள்,பெரியவர்கள் புத் தாடை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். பெரியகுளத்தில் நவாப் ஜாமியா, மதீனா,  மக்கா, தென்ரை, கோட்டைமேடு, அழகர்சாமி புரம் பள்ளிவாசல்களைச் சேர்ந்த ஏராளமா னோர் ஊர்வலமாக வந்து ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். பின்பு அங்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல் கம்பம், போடி ,சின்னமனூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மதுரை  மதுரை காளவாசல் ஈத்கா பில்டிங், எல்லீஸ்நகர், மகபூப்பாளையம் ஆகிய பகுதி களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமுக்கம்,  திருமங்கலம், மேலூர் உட்பட பல்வேறு பகுதி களில் உள்ள திடல்களிலும் சிறப்பு தொழுகை யில் ஈடுபட்டனர்.