districts

img

இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 11,52,302 வாக்காளர்கள்

இராமநாதபுரம், அக்.27- இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு  வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல்  அலுவலர், மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு  சந்திரன் வெள்ளியன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னி லையில் வெளியிட்டார். இதன்படி, இராமநாதபுரம் மாவட்டத் தில் ஆண்கள் 5,73,462, பெண்கள் 5,78,771,  மூன்றாம் பாலினத்தவர்கள் 69 என மொத்தம் 11,52,302 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், இளம் வாக்காளர்கள் மற்றும்  விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்காக வும், தற்போதுள்ள வாக்காளர் பட்டிய லில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்வ தற்கும் நவம்பர் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய  4 நாட்கள், அனைத்து வாக்குச்சாவடிகளி லும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்தி ரன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலு வலர் இரா.கோவிந்தராஜலு, பரமக்குடி  சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், இராமநாத புரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, வட்டாட்சியர் (தேர்தல்) செல்லப்பா, இராம நாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.