districts

அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் பொதுமக்கள்:

தூத்துக்குடி, ஜூன் 27 விளாத்திகுளம் அருகே துரைராஜ் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக துரைராஜ் நகர் பகுதியில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம்  அளித்த மனு: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா கமலாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட துரைராஜ் நகர் பகுதியில் அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை பிரிவாக இருந்தும் எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லல் பட்டு வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதியில் முறையான சாலை வசதி, கழிவுநீர், கால்வாய், தெரு விளக்கு உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லை. மேலும் துப்புரவு ப்பணியாளர்கள் எங்கள் பகுதிக்கு வருவதும் இல்லை, குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை த்தொட்டிகள் ஏதும் பஞ்சாயத்து நிர்வா கத்தில்  ஏற்பாடு  செய்து தரப்பட வில்லை. மேலும் திறந்த வெளியில் குப்பை கொட்டபடுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. அங்கீகாரம் பெற்ற இந்தப் பிரிவில் இருந்து பிரதான சாலை க்கு செல்லும் பாலம் மிகவும் சிதில மடைந்து காணப்படுகிறது மழைக் காலங்களில் இந்த பாலம் வழியாக தண்ணீர் சென்று ஓடும் ஆற்றில் கலக்கும். இதனால் மழை காலங்களில் எங்கள் ஊர் பொதுமக்கள் கல்வி, மருத்து வம், வேலை உள்ளிட்ட எந்தவித அத்தி யாவசிய பணிகளுக்கு செல்ல முடியா மல் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்படு கின்றது. எனவே மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனையில் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் உடனடி யாக சீர்செய்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

;