தேனி, டிச.14- ஆண்டிபட்டி அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 389 பயனாளிகளுக்கு ரூ.84.63 லட்சம் மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் வழங்கினார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட கதிர்நரசிங்காபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தலைமையில் நடை பெற்றது. முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 389 பயனாளி களுக்கு ரூ.84.63 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் . வேளாண் மைத்துறை இணை இயக்குநர் செந்தில்குமார், பெரிய குளம் வருவாய் கோட்டாட்சியர் கி.சிந்து, துணை இயக்கு நர் (சுகாதாரப்பணிகள்) போக்ஸோ ராஜா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) என்.சாந்தி, ஆண்டிபட்டி வட்டாட்சி யர் சுந்தர்லால், உட்பட பலர் கலந்து கொண்டனர்.