தேனி, ஆக.9- பெரியகுளம் அருகே முருகமலை நகர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 807 பயனாளிகளுக்கு ரூ. 6.47 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா வழங்கினார். இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் உரிய விசாரணைக்கு உட்படுத்தி, அதிகபட்சமாக 30 நாட்க ளுக்குள் தீர்வு காணும் வகையில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ,ப.. அவர்கள் தெரிவித்தார். இம்முகாமில்,பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் , மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய பாரதி, ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அ. தங்கவேல், மாவட்ட ஊராட்சி துணை தலை வர் ராஜபாண்டி, ஊராட்சி மன்றத்தலை வர் எல்.எம்.சின்னப்பாண்டி பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் த.முத்துமாத வன், பெரியகுளம் வட்டாட்சியர் பி.அர்ஜூ னன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.