அருப்புக்கோட்டை, ஜன.4- அருப்புக்கோட்டை வட்டம் வெள்ளக்கோட்டை, காந்தி நகர் மற்றும் ஆத்திப்பட்டி ஆகிய பகுதி களில் உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு 21 பொருட்கள் அடங் கிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார். அப்போது அவர் கூறியதா வது: தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும், சிறப்புத் தொகுப்புடன் கரும்பும் சேர்த்து 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ. 1,296.88 கோடி செலவில் வழங் கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டத்தில் 75,810 காரியாபட்டி வட்டத்தில் 32,425, இராஜபாளை யத்தில் 1,00,146, சாத்தூரில் 41,679, சிவகாசியில் 1,14,231, திரு வில்லிபுத்தூரில் 52,532, திருச்சுழி யில் 34,500, வத்திராயிருப்பில் 37,991 மற்றும் வெம்பக்கோட்டை யில் 35,927, விருதுநகரில் 67,456 என 5,92,697 அரிசி வகை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங் கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் களில் 1003 குடும்பங்கள் என மொத்தம் 5,93,700 குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த சிறப்பு தொகுப்புகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மண்டல இணைப்பதிவாளர்(கூட்டுறவு சங்கங்கள்) செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் பால் துரை, அருப்புக்கோட்டை வட் டாட்சியர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.