districts

img

குறிஞ்சான் குளம், ஈச்சம் பொட்டல் புதூர் கோவில்களில் தீண்டாமைக் கொடுமை

தென்காசி, ஜூலை 1 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் குறிஞ்சான் குளம் மற்றும் ஈச்சம் பொட்டல்புதூர் கிராமத்தில் கோவில் பிரச்சனைகள் சம்பந்தமாக அங்கு நிலவும் தீண்டா மை கொடுமைகளுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி  தலைமையில்  தென்காசி மாவட்ட ஆட்சித் தலை வரிடம் மனு அளிக்கப்பட்டது.  இந்நிகழ்வில் சிபிஎம் தென்காசி மாவட்டச் செயலாளர் உ.முத்துப் பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  உச்சிமாகாளி,  அசோக் ராஜ், குணசீலன், மாவட்டக் குழு உறுப்பினர்களான  நடராஜன், மாடசாமி மற்றும் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி தென்காசி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் பால்ராஜ் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள்  செங் கோட்டை முருகேசன், சங்கர் புளியங்குடி சீனி பாண்டி மற்றும் குருஞ்சான்குளம்,  ஈச்சம்பொட்டல் புதூர் கிராமத்தைச் சேர்ந்த நாட்டாமை அந்தோணி ராஜ், சங்கரன், அமிர்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . மனுவைப் பெற்றுக் கொண்டு  உடனடியாக நட வடிக்கை எடுக்கிறோம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

;