districts

img

தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம்

தேனி, ஜூலை 11- தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.4 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் வழங்கினார். இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000-க்கான தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் ரூ.25,000- வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான ஆணையிணையும் 6 பய னாளிகளுக்கு தலா ரூ.12,500-க்கான தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் ரூ.12,500- வங்கி கணக்கில் வரவு வைக்கப்  பட்டதற்கான ஆணையிணையும் என மொத்தம் 11 பய னாளிகளுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி களையும் வழங்கினார். மேலும், பெரியகுளம் வட்டத்தில்  சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு முதி யோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை யும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிர மணியன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) என்.சாந்தி,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  செல்வராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.