தேனி, டிச.27- பனை விதைகள் நடவு செய்யும் பணி,ஆணி பிடுங்கும் திருவிழா என்ற பெயரில் மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகள்,விளம்பர பதாகைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட 30 அமைப்புகளுக்கு தமிழக அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு சான்று வழங்கி கவுரவித்தார். மாவட்ட தன்னார்வலர்கள் குழுவினர் கடந்த 3 ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் பனை விதைகள் நடவு செய்யும் பணி, ஆணி பிடுங்கும் திருவிழா என்ற பெயரில் மரங்களில் அடிக்கப் பட்டுள்ள ஆணிகள், விளம்பர பதாகைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த களப்பணியில் பங்கேற்ற பல்வேறு அமைப்பு களை சேர்ந்தவர்களுக்கும், தன்னார்வலர்க ளுக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் நன்றி நவிலும் விழா தேனியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். சென்னை யுனிவர்சல் சின்டிகேட் அமைப்பு தலைவர் நைனார் முகமது முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக சுற்றுச்சூழல் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்துகொண்டு தன்னார்வலர்க ளுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயங் கள் வழங்கி பேசினார். விழாவில், நம்மாழ்வார், பென்னி குவிக் பெயர்களில் 9 பேருக்கு விருது, 30 அமைப்பு கள், 180 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டன. விழாவின் போது, தேனி மாவட்டத்தில் தன்னார்வலர்களின் சார்பில் மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கத்தை அமைச்சர் தொடங்கி வைத்து மஞ்சள் பை வழங்கினார். விழாவில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச்செயலாளர் ராஜமோகன், தேனி கவுமாரியம்மன் உணவு நிறுவன நிர்வாக இயக்குநர் சுதாகர், தேனி பாலசங்கா நிறுவன நிர்வாக இயக்குநர் செந்தில்நாராய ணன், ஓட்டல் தேனி இண்டர்நேஷனல் உரி மையாளர் அய்யப் பன், தேனி மாவட்ட தன்னார்வ லர் குழு ஒருங்கிணைப்பாளர் பசுமைசெந்தில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.