districts

img

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு

மதுரை/திண்டுக்கல்/தேனி, ஜூன் 13- தமிழகம் முழுவதும் திங்களன்று பள்ளி கள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்குச் சென்றனர். திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றி யம், அழிஞ்சிவாக்கம், ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில்,  “எண்ணும் எழுத்தும்” என்ற முன்னோடித் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்து, “எண்ணும் எழுத் தும்” மாதிரி வகுப்புகளை பார்வையிட்டார். அங்குள்ள “எண்ணும் எழுத்தும்” மாதிரி வகுப்புகளை பார்வையிட்ட போது, 3 ஆம் வகுப்பு பயிலும் சிறுமியை அழைத்து “தமிழ்”  என்று எழுதுமாறு கேட்டார், அச்சிறுமியும் “தமிழ்” என்ற வார்த்தையை சரியாக எழுதிய தைப் பாராட்டி இனிப்புகளை வழங்கினார். இருப்பினும் பள்ளி திறந்த முதல் நாள் மாணவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் வருமாறு:-

அல்அமீன் பள்ளி
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் திரு மோகூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் மாவட்ட ஆட்சிய எஸ். அனிஸ் சேகர் பள்ளியினை நேரில் ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாட புத்த கங்களை வழங்கினார்.  மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல் நிலைப்பள்ளியில் இக்கல்வியாண்டின் முதல்  நாளான திங்களன்று மாணவர்களை வர வேற்கும் விழா ”வரவேற்பு விழா” வாகக் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் ஷேக் நபி தலைமை வகித்தார். உதவித் தலை மையாசிரியர் ரஹ்மத்துல்லா வரவேற்றார்.  முன்னாள் மதுரை வானொலி நிலைய அலுவலர் சண்முக ஞானசம்பந்தன் சிறப்பு  விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகை யில், கொரோனா காலத்தில் மாணவர்கள் இழந்த கல்வியை மீட்டெடுக்கவும், இந்த  ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஆர்வத்துட னும், விடாமுயற்சியுடனும் கல்வி கற்க வேண்  டும் என்றார்.  தமிழாசிரியர் தெளபிக் ராஜா நன்றி கூறி னார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அபு தாஹிர், அல்ஹாஜ் முகமது, அமித், காதர், மன்சூர் செய்திருந்தனர்..

விருதுநகர்
விருதுநகர் பாவாலி சாலையில் நக ராட்சி முஸ்லிம் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களை  இனிப்பு வழங்கி, வரவேற்றார் மாவட்ட ஆட்சி யர் மேகநாதரெட்டி. தொடர்ந்து மேலும், பள்ளி சேர்க்கை அட்டை மற்றும் புத்தகங்களையும் வழங்கினார். ‘எண்ணும் எழுத்தும்‘ திட்டத்தை யும் தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகௌரி, தலைமையாசி ரியர், ஆசிரியர்கள் உட்பட பலர் உடனி ருந்தனர்.

திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்க னூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை சேர்க்கை நடைபெற்று வருகிறது முதல்நாளான திங்க ளன்றே மாணவர் சேர்க்கைக்கு அதிக அள வில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டினர்  பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்தர் மற்றும் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் அது வும் தமிழ் வழிக் கல்வியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டங்களை ‘அரசோட பள்ளிக்கு வாங்க... பிள்ளைகளை சேர்த்து விட்டு போங்க... கல்வியில் வேலை வாய்ப்  பில் ஏழு புள்ளி அஞ்சு சதமும்... தமிழ் வழி யில் படித்தாலே.... இருபது சதம் அரசு பள்ளி யில் அனைத்தும் தரம் இங்கு படித்தால்தான் இனி எதிர்காலம் என தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித் துறையில் கொண்டுவந்த சாதனை திட்டங்  களை விளக்கி பாடலாக பாடினார் மாணவர் சேர்க்கைக்காக வந்த மாணவர்களுக்கு மாலையிட்டு மரியாதை செய்து வரவேற்ற னர். இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் பள்ளி திறந்த முதல் நாளே 100 சதவீத  மாணவர் சேர்க்கை நடந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளி செல்ல ஆட்டோ வாடகை ரூ.20 ஆயிரம்
பேருந்து வசதி இன்றி பள்ளி செல்ல முடி யாமல் தவிப்பதாக போடி பகுதியை சேர்ந்த  பழங்குடியின மாணவ -மாணவிகள் தேனி  ஆட்சியர் க.வீ.முரளீதரனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.  போடி அருகே உள்ள சிறைக்காடு பகுதி யில் மலைவாழ் பழங்குடியின மக்கள் நூற்  றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.‌ போடியிலிருந்து பத்து கி.மீ தொலைவில் உள்ள சிறைக்காடு பகுதிக்கு பேருந்து வசதி கிடையாது.‌ கோடை விடுமுறைக்குப் பின்  ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை திங்க ளன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலை யில் தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி இல்லா ததால் பள்ளி செல்ல முடியவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பழங்  குடியின மக்கள் வந்தனர். போடியில் உள்ள  அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் படித்து  வரும் சிறைக்காடு பகுதியைச் சேர்ந்த சுமார்  30-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சென்ற ஆண்டு வரை  இலவசமாக ஆட்டோ வசதி செய்திருந்தனர்.‌ ஆனால் ஆட்டோ ஒன்றுக்கு வாடகைக் கட்டணம் மாதம் ரூபாய் 20,000 செலவு ஏற்படு வதால் இந்த ஆண்டிலிருந்து பெற்றோர்களே ஆட்டோ கட்டணத்தை ஏற்கும்படி பள்ளி நிர் வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மலைவாழ் பழங்குடியின மக்களான தங்களால் ஆட்டோ  கட்டணம் செலுத்த முடியாததால், அரசு சார்  பில் பேருந்து வசதி செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் முரளீதரனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். பள்ளி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து கழகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி பள்ளி மாணவ - மாணவி யர்களுக்கு போக்குவரத்து வசதி விரைவில் செய்து தருவதாக ஆட்சியர் உறுதி அளித் தார்.

குப்பை அள்ள வைத்த பள்ளி
பள்ளி திறந்த முதல் நாளே மாணவர் களை குப்பை அள்ள பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள் ளது. திண்டுக்கல் திங்களன்று மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன முதல் நாள் என்பதால் குழந்தைகள் காலை  எட்டு மணி முதல் பள்ளிக்கு வரத் தொடங்கி னர். திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள  ஒரு பள்ளியில் மாணவர்களை பள்ளியை சுத்தம் செய்ய பயன்படுத்தியது. சேகரிக்கப்  பட்ட குப்பைகளை பள்ளிக்கு வெளியே உள்ள  குப்பை தொட்டியில் கொட்டுவதற்கும் அனுப்  பியது. மாணவர்கள் குப்பைகளை சுமந்து வந்து கொட்டிச் சென்றனர்.  இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட  முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்டபோது  உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி கண்டிப்பதாகவும் உறுதியளித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் சாதிச் சான்றி தழ் பெறமுடியாததால் மாணவர்கள் சீருடை யுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த னர். பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக சிறு குழந்தைகள் ஆர்வத்  துடன் பென்சில்கள், வண்ண பென்சில்கள், குறிப்பாக பிரபலமான கார்ட்டூன் கதாபாத்தி ரங்கள் கொண்ட பள்ளி பைகள் ஆகிய வற்றை ஆர்வத்துடன் வாங்கினர். பள்ளிகளே நோட்டுக்களை வழங்குவதால் அதன் விற் பனை சற்று மந்தமாகவே உள்ளது.  நமது நிருபர்கள்