இராமநாதபுரம், ஆக.24- இராமநாதபுரத்தில் கடற்கரை மேலாண்மை திட்டம் 2019 குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாவட்டச் செயலாளர் எம்.கருணா மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஜி.செலஸ்டின், பொதுச்செயலாளர் அந்தோணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். சிவாஜி, உள்ளிட்ட மீன் பிடி தொழிற் சங்க கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் வங்கி அதி காரிகள் சங்கத்தின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ கலந்து கொண்டு கடற்கரை மேலாண்மை திட்டத்தின் அபாயங்களை மீன வர்களுக்கு விளக்கிப் பேசினார். இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 131 கடற் கரை கிராமங்களில், மீனவர்க ளுக்கோ, மீனவ கிராம நிர்வாகி களுக்கோ கடற்கரை மேலாண்மை திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டத்திற்கான தகவல் தரப்பட வில்லை. இதுதொடர்பாக சிஐடியு மாவட் டச் செயலாளர் எம்.சிவாஜி வெளி யிட்டுள்ள அறிக்கையில், ‘‘இராம நாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 29 அன்று கடற்கரை மேலாண்மைத் திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தக வல் கிடைத்துள்ளது. இந்தக் கூட்டம் தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 131 கடற்கரை கிராம மீன வர்களுக்கோ, மீனவ கிராம நிர்வா கிகளுக்கோ தகவல் தெரி விக்கப்படவில்லை. இந்தத் திட்டம் குறித்த விவரமோ, வரைபடமோ மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட வில்லை.
அரசு அதிகாரிகளுக்கு வேண் டிய ஒரு சில மீனவர்களை வைத்து கூட்டத்தை நடத்தி, கடற்கரை மேலாண்மைத் திட்டத்துக்கு ஒப்பு தல் பெறக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தத் திட்டத்தை இராமநாதபுரத்தில் செயல்படுத்தி னால் கடலும், கடற்கரையும், கடல் வளமும் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்குச் சென்றுவிடும். பாரம்பரிய மீனவர்கள் கடற்கரையைவிட்டு அப்புறப்படுத்தப்படும் அபாயம் ஏற்படும். எனவே, ஆகஸ்ட் 29 அன்று நடைபெற உள்ள கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஒத்திவைத்து, உண்மை யான மீனவர்களுக்கு வரைபடத் தையும், திட்டம் குறித்த நோக்கங் களையும் விளக்க வேண்டும். பின்னர், கூட்டத்தை நடத்த வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. கருத்துக் கேட்புக் கூட்டங்கள் ரத்து இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் நடை பெற இருந்த கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் மற்றும் வரைபடம் மீதான கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய தென்மண்டல தேசிய பசு மைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள் ளது. மேலும் மீன்கள் எங்கு இனப்பெருக்கம் செய்யும் என்கிற விபரங்கள் கூட இல்லாமல் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டால் மீன வர்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்படும். கட்டுமானங்கள் இடம் பெறக் கூடாத இடங்கள் தவறாக குறிக்கப்பட்டால் கடலோரச் சூழல் அமைவுகள் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளது.