districts

சட்டமன்றத் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் இல்லை: அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி

மதுரை, செப்.9- மதுரை மாவட்டத்தில் உள்ள பத்து சட்ட மன்றத் தொகுதிகளிலும்  வளர்ச்சித் திட்டப்  பணிகள் சிறப்பான முறையில் நடை பெற்று வருகிறது.  என்றார் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி.  மதுரை மாநகராட்சி திருப்பாலையில் கால்நடை பராமரிப்புத் துறையின் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் மற்றும் ரூ.157 லட்சம் மதிப்பில் திரு மங்கலம், மேல உரப்பனூர், கூத்தியார் குண்டு ஆகிய இடங்களில் மூன்று புதிய  மருந்தகக் கட்டிடங்களை மதுரை ஆட்சி யர் சௌ.சங்கீதா,  தலைமையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி சனிக்கிழமை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராம ரிப்புத் துறை இணை இயக்குநர் நட ராஜன், மதுரை மாநகராட்சி மண்டலத் தலை வர் வாசுகி, மாமன்ற உறுப்பினர் ராம மூர்த்தி கால்நடை பராமரிப்புத் துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மதுரையில் கால்நடைத் துறை மூலம்  ரூ.157 லட்சம் மதிப்பில் கால்நடை மருந்த கங்கள் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டுள் ளது. மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள கிழக்குத் தொகுதி யில் 14 வார்டுகள்,  திருப்பரங்குன்றம் தொகு தியில் 15 வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டு வதற்கு எனது தொகுதியைத் தவிர மற்ற  அனைத்து தொகுதிகளுக்கு அனுமதி  வரப்பெற்றுள்ளது.  கடந்த ஆட்சிக்காலத் தில் திருமங்கலம் தொகுதிக்கு மட்டும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று வரை பணிகள் நடைபெற்று வருகிறது.   மதுரை மாநகராட்சியைப் பொறுத்த வரை பல்வேறு பணிகள் பல்வேறு பகுதி களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   உசிலம்பட்டி தொகுதியில் ரூ.75  கோடி மதிப்பில் தார்ச்சாலை பணிகள்  ஆரம்பிக்கப்பட உள்ளது.  திருப்பரங்குன் றம் தொகுதியில் ரூ.35 கோடி மதிப்பில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  மதுரை தெற்குத் தொகுதியில் மருத்துவ மனை மற்றும் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.  பாதாளச் சாக்கடை விடுபட்ட பகுதி களில் அதாவது மதுரை கிழக்குத்  தொகு திக்கு ரூ.167 கோடி, திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூ.253 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி கள் விரைவில் தொடங்க உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத் துறைகளின் மூலமாக மக்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படை பணிகளைத் தொடர்ந்து  செய்துகொண்டு வருகிறார் என்றார்.