districts

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கம்

திருநெல்வேலி,  ஜூன் 27- நெல்லையப்பர் -காந்தி மதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர்திருவிழா விமரிசை யாக நடைபெறும். கொரோ னாவால் கடந்த 2 ஆண்டுக ளுக்கு பின்னர் இந்தாண்டு தேரோட்டம்  நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆனித்தோரட்டம் வருகிற 3-ஆம் தேதி கொடி ஏற்றத் துடன் தொடங்குகிறது. விடு முறை விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ஆம் தேதி நடை பெறுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு 11 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நான்கு ரத வீதி களில் தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.  திருவிழா நாளில் தின மும் சப்பர பவனி ரதவீதி களில் நடைபெறும். இதனால் வாகனங்கள் ரதவீதிகள் வழி யாக செல்லாத வண்ணம் தற்போதே வாகன போக்கு வரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதனால் நெல் லையப்பர் கோவிலின் முன் உள்ள அனுப்பு மண்டபம் முன்பு தடுப்பு கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல் லும் வாகனங்கள் சொக்கப் பனை முக்கு வழியாக மவுண்ட்ரோடு சென்று காட்சி மண்டபம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கோரிக்கை  பாரதியார் பள்ளி அமைந் துள்ள சாலையில் பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகி றார்கள். எனவே அப்பாதை யை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வடக்கு ரதவீதியில் சாலை யில் கழிவுநீர் செ ல்வதை தடுக்க உடனடியாக நடவ டிக்கை எடுக்கவும் கோரிக் கை வைத்துள்ளனர்.

;