districts

img

மதுரை எய்ம்ஸ்-க்கு மோடி அரசு சுவர் கூட கட்டவில்லை

மதுரை, அக்.6-  பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மனையை கட்டி திறந்துள்ள மோடி  அரசு, மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு இன்னமும் சுவர் கூட கட்ட வில்லை என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய பாஜக அரசை சாடியுள்ளார். மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 3 -வது மண்ட லத்தில் சுந்தரராஜபுரம் பகுதியில் புதிய  ரேசன் கடையை தமிழக நிதி-மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வியாழனன்று  திறந்து வைத்தார். இத னைத்தொடர்ந்து சுப்பிரமணிய புரத்தில் மாமன்ற உறுப்பினர்  அலு வலகத்தையும் திறந்து வைத்தார். பின் னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில்,  தேர்தல் நேரங்க ளில் அளிக்கப்படும் வாக்குறுதிகளில் இலவசங்கள் குறித்து, எந்த வகையில் அந்த இலவசங்கள் வழங்கப்படுகிறது, அதற்கான நிதி குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று  தேர்தல் ஆணையம் அரசியல் கட்சி களுக்கு எழுத்துப்பூர்வமாக  கடிதம்  அனுப்பியிருக்கிறது.   இதுகுறித்து நீதி மன்றத்தில் வழக்கு வரும்போது நாங் கள் எந்த குழுவும் அமைக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டு, தற்போது கூறும் கருத்து  முரண்பாடாக உள்ளது.   ஒரே நேரத்தில் அறிவிக்கப் பட்டது பிலாஸ்பூர் எய்ம்ஸ், மதுரை எய்ம்ஸ். ஆனால் பிலாஸ்பூர் எய்ம்ஸ் திறக்கப்பட்டுவிட்டது. மதுரை எய்ம்ஸ்க்கு  இன்னமும் சுவர் கூட கட்ட வில்லை. அரசியல் ரீதியாக ஒன்றிய அரசு ஒன் சைட் கேம் ஆடுவது போல தெரிகிறது. ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன்தான் அனைத்தையும் செய்வதாக தெரிகிறது.மக்கள் நல னுக்காக எதையும் செய்வதாக தெரிய வில்லை.

மாநிலங்களுக்கு பாரபட்சமாக நிதியை ஒதுக்கி பல அரசியல் தந்திர வேலைகளை செய்ய முடியும் என்று  ஒன்றிய அரசு  நினைக்கிறது  ஒரு புதிய பெயரினை வைத்து திட்டத்திற்கு ஒன் றிய  அரசு 60 சதவீதம் என்றும் மாநில அரசு 40 சதவீதம் என்றும் அறிவித்து, பின்னர் அந்த திட்டத்தினை ஓராண்டு காலம் கழித்து  40 சதவீதம் ஒன்றிய   அரசு வழங்கும் என்றும் மீதமுள்ள 60 சத வீதத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.  இன்னும் சில  ஆண்டுகள் கழித்து 25 சதவீதம் ஒன்றிய  அரசு வழங்குவது என்றும் மீதமுள்ள 75 சதவீதத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் கூறுகிறது ஆனால்  பிரதமர் பெயரில் அந்த திட்டத்தை வகுத்து வைத்துவிட்டு மாநில அரசு  அதிக தொகையை வழங்க வேண்டும் என்று கூறுவது சரியான நிலை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை நிச்சயமாக நடத்த வேண்டும். ஆனாலும் ஒன்றிய  அரசு, சில மாநிலங்கள் அறிக்கை தர வில்லை என்ற காரணத்தைக் கூறி கால தாமதப்படுத்துகிறது. ஜிஎஸ்டி கவுன் சில் கூட்டத்தை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்தார்.   இந்நிகழ்ச்சியில் மதுரை மாநக ராட்சி மேயர் இந்திராணி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

;