districts

img

தியாகிகள் தின நிகழ்ச்சி

திருவில்லிபுத்தூர், ஜன.21-  திருமெய்ஞானம் தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் நினை வாக ஜனவரி 19ஆம் தேதி தியாகிகள் தின நிகழ்ச்சி திருவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில் சிஐடியு சார்பில் நடைபெற்றது.  இதற்கு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் திருமலை தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன், சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா ஆகியோர் விளக்கிப் பேசினர்.  இதில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.கணேசன், தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்கம் மாவட்ட  செயலாளர் ஆர்.சோமசுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முரு கன், அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டி யன்,  சிஐடியு மாவட்ட நிர்வாகிகள், உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.