மார்ச் 1 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 69-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மானாமதுரையில் உள்ள முதியோர் இல்லத்தில் இனிப்பு, உணவு வழங்கினார். நிகழ்வில் மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தேசிங்கு, மேலப்பசளை ஊராட்சி மன்ற தலைவர் சடையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.