districts

மதுரை வடக்கு தொகுதியில் சு.வெங்கடேசன் எம்.பி இன்று மக்கள் சந்திப்பு

மதுரை, ஜூன். 21-   மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன்தலைமையில் வடக்கு சட்டமன்ற தொகுதி மக்கள் சந்திப்பு மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் வியாழனன்று காலை 9. 30 மணிக்கு  செல்லூர் சோலை மஹால் நடைபெறுகிறது. இதில் வார்டுகள் 15 ரிசர்வலயன், 25.பி.பி. குளம், 28 கோரிப்பாளையம், 23 அய்யனார் கோவில், 26 நரிமேடு, 31 தல்லாகுளம், 24 மீனாம்பாள்புரம், 27 அகிம்சாபுரம், 32 சின்ன சொக்கிகுளம் பகுதி மக்கள் தங்கள் பகுதி அடிப்படை பிரச்சனைகள் குறித்து கோரிக்கை மனுக்களை வழங்கலாம். பிற்பகல் 2 மணி சூர்யா பத்மா மஹால், குரு சைக்கிள் மார்ட் எதிரில் புதூர், அண்ணாநகர், கே. கே. நகர் பகுதி வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டு கள் 10 கற்பக நகர், 12 லூர்துநகர், 13 ஆத்திகுளம், 14 புதூர், 16 வள்ளுவர் காலனி, 33 கே.கே.நகர்,  34 அண்ணாநகர், 35 சாத்தமங்கலம் ஆகிய பகுதி  மக்கள் தங்கள்  பகுதி அடிப்படை பிரச்சனைகள் குறித்து மனு அளிக்கலாம். இதில் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர், ஆணை யாளர்,   துணை மேயர், வடக்கு, கிழக்கு மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.