மதுரை, மே. 7- தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி ஓராண்டு சாதனை மலரை மதுரை மாநகராட்சி சார்பில் அறிஞர் அண்ணா மாளிகையில் மேயர் வ. இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் மரு . கா.ப.கார்த்திகேயன், துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் சனிக்கிழமையன்று வெளியிட்டனர். தொடர்ந்து செல்லூர் மாநகராட்சி வாகன காப்பகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணி களுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள வாக னங்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர். அவனியாபுரத்தில் மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டனர்.