மதுரை, ஜூலை 25- மதுரையில் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் அதிகம் விரும்பி செல்லக் கூடிய இடமாக வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் கொண்டு வரப்படுவதால் ஆண்டு முழுவதுமே தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர் மக்களையும் மகிழ்விக்கும் வகையில் மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் தெப்பக்குளத்தில் படகு சேவை தொடங்கப்பட்டது. கடந்த காலத்தில் பெடல் படகுகள் இருந்தன. தற்போது மோட்டார் படகுகள் மட்டுமே உள்ளன. அதனால் கூடுதலாக பெடல் படகுகளை இயக்க மீனாட்சி யம்மன் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்தனர்.இதற்கிடையே, ஞாயி றன்று முதல் படகு சேவை தொடங்கப்பட்டது.