districts

மதுரை முக்கிய செய்திகள்

ஆளுநர்  தனது வேலையை செய்வதில்லை: கி.வீரமணி

வேலூர், அக்.28- ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா திட்டத்தின் உள் நோக்கம் குறித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே திராவிட கழகம்  சார்பில் விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தலைவர் வீரமணி, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள விஸ்வகர்மா திட்டம் என்பது முற்றி லும் சாதி அடிப்படையில் திட்டமாகும். இந்த காலத்திலும் மக்களை வேறுபாடு செய்ய அவர்கள் முயற்சிக்கின் றனர்”என்றார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொல்கிறார்கள் அதற்கு என்னுடைய விளக்கம் என்பது, இதுதான் நமக்கு இறுதி தேர்தல் என்று பாஜக நினைத் துள்ளது மற்றும் நாம் அவர்களுக்கு இறுதி தேர்தல் இதனை முடித்து விட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களை சந்தித்த கி.வீரமணி, “தமிழ் நாடு ஆளுநர் மாளிகை வெளியில் நடந்திருப்பது காவல்துறையே முழு விவரத்தை தெரிவித்துள்ளது. எதை யாவது சொல்லி தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் தேடித்தர சிலர் முயற்சிக் கின்றனர். எந்த வேலை ஆளுநர் செய்ய  வேண்டுமோ அதை அவர் செய்வ தில்லை. எந்த வேலை பார்க்கக் கூடாதோ அதைத்தான் அவர் பார்க்கின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரை எதிர்த்து சென்னையில் பேரணி

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரை நிறுத்த வேண்டும், பாலஸ்தீனம் பால ஸ்தீனியருக்கே என வலியுறுத்தி நவ.3  அன்று சென்னையில் பேரணி நடை பெறுகிறது.

அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுமக்கள் அமைப்பு களின் கூட்டம் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை யில் நடைபெற்றது. இதில், 20க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில், நவ.3  அன்று பழைய சித்ரா திரையரங்கம் அருகில் தொடங்கி தாளமுத்து, நட ராஜன் மாளிகை வரை பேரணி நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டு ள்ளது. இதனையொட்டி துண்டு பிரசுர பிரச்சாரம் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படுமா?  அரசு தகவல்

சென்னை, அக்.28- வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கப்பட்டு, விதிகளை பின் பற்றியே கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பட்டியலை திருத்தாமல் தேர்தல் நடத்தக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது. வாக்காளர் பட்டியலில் குறைகளை சரி  செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கா மல் தற்போது தேர்தல் நடத்த முனைப்பு வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

தேர்தலை நேர்மையாகவும், வெளி ப்படையாகவும் நடத்த அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரு கின்றன என அரசு தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை,அக்.28- தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரி களை பணியிட மாற்றம் செய்து முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். இதில், சென்னை ரயில்வே காவல் எஸ்.பி.யாக சுகுணா சிங் நிய மனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் மதுரை கமாண்ட ண்ட் பாஸ்கரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தாம்பரம் சட்டம் ஒழுங்கு டிசியாக கவுதம் கோயல் ஐபிஎஸ் பணிட மாற்றம் செய்யப்பட் ப்பட்டுள்ளார்.

தங்கம் விலை  ரூ.520 உயர்வு

சென்னை,அக்.28- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையன்று (அக்.28)ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520  உயர்ந்து ரூ.46,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம்  ரூ.65 உயர்ந்து ரூ.5,770-க்கு விற்பனை யானது.வெள்ளியின் விலை மாற்ற மின்றி ஒரு கிராம் ரூ.77.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.