districts

மதுரை முக்கிய செய்திகள்

பாம்பு கடித்த 1909 பேரை காப்பாற்றி மதுரை அரசு மருத்துவர்கள் சாதனை

மதுரை, ஜூன் 7-  பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட 1909 பேரை மதுரை  அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை  மூலம் காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ள னர்.  மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே குடி யிருப்பு பகுதியில் பாம்புகள் அதிகம் சுற்றித் திரியும்  நிகழ்வுகள் அதிகரித்துவருகின்றன. இந்த பாம்புகளை பிடிக்க தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு துறை யினர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2021 மற்றும் 2022 காலகட்டங்களில் மட்டும்  மதுரை மாவட்டத்தில், சுமார் 1945 பேர் பாம்பு கடியால்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 36 பேர் உயிரி ழந்துள்ளதாகவும் ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 1909 பேரை உயர்தர சிகிச்சை மூலம் காப்பாற்றி மருத்துவர்கள் புதிய  சாதனை படைத்துள்ளனர்.

நள்ளிரவில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து 

மதுரை, ஜூன் 7-  மதுரை காளவாசல் நமச்சிவாய நகரில் வசித்து வருபவர் நவீன் சுந்தர். இவரது வீட்டின் வெளியே வைக்  கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி தீப்பொறி வரு வதால் இதுகுறித்து பல வருடங்களாக மின் பொறியாள ரிடம் தகவல் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாயன்று நள்ளிரவு 12 மணி அள வில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீப்பொறியால் வெடித்து  தீ விபத்து ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து வந்த காவல்  துறையினனர் மற்றும் தீயணைப்பு துறையினர் போராடி  தீயை அணைத்தனர். வீட்டிற்கு தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

மதுரையில் கூடுதல் நீதிமன்ற வளாகம் கட்ட ஒப்பந்தப் புள்ளி வெளியீடு

மதுரை, ஜூன் 7-  மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவதால் இட நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தன. இந்நிலையில்,மாவட்ட நீதிமன்றத்தின் கோரிக்கை யை ஏற்று கூடுதலாக நீதிமன்றம் கட்டப்படும் என தமிழக  அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் கடந்த மாதம் தமி ழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் தலைமை நீதி பதி முன்னிலையில் அதற்கான அடிக்கல் நாட்டும் பணியா னது மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடை பெற்றது. இந்நிலையில் கட்டுமான பணிக்கான ஒப்பந்த புள்ளி யை பொதுப்பணித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சுமார் 166 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று அடுக்கு களாக தரைதளத்தில் சுமார் 157 கார் மற்றும் 203  இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் திட்டமி டப்பட்டுள்ளதாகவும்,இதில் 18 நீதிமன்றங்கள் இருக்கும்  வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாளை இராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறைகேட்பு கூட்டம்

இராமநாதபுரம், ஜூன் 7-  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் செய்திக்குறிப்பில் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீனவர்களின் குறை கேட்பு கூட்டம் நடத்தக் கோரி மீனவ பிரதிநிதிகளால் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.இதைத் தொடர்ந்து, ஜூன் 9 அன்று பிற்பகல் 3.30 மணி யளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைகேட்பு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலை மையில் கூட்டம் நடைபெற உள்ளது.  அக்கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட அரசுத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்துகொள்ள இருப்பதால், இராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவ மக்களும் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெற்றிடு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும், மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனு வாக அளித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள  வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அரிக் கொம்பன் பிடிபட்டதை தொடர்ந்து  சுருளி அருவியில் குளிக்க அனுமதி

தேனி, ஜூன் 7- மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்மன் யானை  மயக்க ஊசி செலுத்தப்பட்டு குமரி மாவட்டம் முத்துக் குழி வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து  சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். சுருளி அருவிக்கு  மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு  பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்ற னர். மேலும் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்  களுக்கு தர்ப்பனம் கொடுக்க அதிக அளவில் பக்தர்கள்  வருகின்றனர். கடந்த 27 ஆம் தேதி கேரள வனப்பகுதியில் இருந்து தமிழகத்திற்குள் அரிக்கொம்பன் யானை புகுந்தது. கம்பம் நகரில் அட்டகாசம் செய்து பின்னர்  சுருளிபட்டி பகுதியில் முகாமிட்டது. நீண்ட போராட்டத் திற்கு பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானை கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி வனப்பகுதியில் விடப்பட்டது. தற்போது யானை அச்சம் முழுவதும் விலகியுள்ளதால் சுருளி அருவி  மற்றும் மேகமலைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை  முதியவருக்கு 20 ஆண்டு சிறை

தேனி, ஜூன் 7-  போடி அருகே பத்திரகாளிபுரம், பிள்ளையார் கோயில்  தெருவைச் சேர்ந்தவர் முத்துவீரப்பன் மகன் ஐயப்பன் (73). இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு அதே தெருவைச் சேர்ந்த 8 மற்றும் 6 வயதுள்ள சகோதரிகள் இருவரை தனது  வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்து  வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமிகளின் தாயார் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித் தார். இந்தப் புகாரின் மீது காவல்துறையினர்  வழக்கு பதிந்து  கடந்த 2019 ஜூலை 29 -ஆம் தேதி ஐயப்பனை கைது செய்த னர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதி பதி எஸ்.கோபிநாதன், சிறுமிகளுக்கு பாலியல் தொந்த ரவு அளித்த ஐயப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண் டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கஞ்சா  கடத்திய 2 பேருக்கு   10 ஆண்டு சிறை  தண்டனை 

தேனி, ஜூன் 7- திருவனந்தபுரம் மாவட்டம், காரமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ மகன் பிரசாந்த்ராஜ்(27). கொல்லம் மாவட்டம், காந்திநகரைச் சேர்ந்தவர் சாகுல்அமீது மகன்  சஹாநாத்(23). இவர்கள், கடந்த 2017, ஜூன் 6ஆம் தேதி  ஆண்டிபட்டி வட்டாரம், கரட்டுப்பட்டி பகுதியில் காரில்  கஞ்சா கடத்திச் சென்றதாக கடமலைக்குண்டு காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 38 கிலோ  கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த சிறப்பு நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஏ.எஸ்.ஹரிகரகுமார், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பிரசாந்த்ராஜ், சஹாநாத் ஆகி யோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ஒரு  லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

வாகனம் மோதி இளைஞர் பலி

மதுரை, ஜூன் 7-- மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு சாலை யில் மங்களாம்பட்டி சிவராமன் (21) என்பவர் இருசக்கர  வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது அவர் மீது  அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்,சம்பவ இடத்திலேயே பலியனார். இந்த விபத்து குறித்து மேலூர்  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவராமன் தற்போதுதான் போக்சோ வழக்கில் நிபந்  தனை ஜாமீனில் வெளியே வந்த நிலையில் விபத்தில் உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

சின்னாளப்பட்டி அருகே  விபத்தில் தம்பதி பலி 

சின்னாளப்பட்டி, ஜூன் 7- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி பரமேஸ்வரி, மகன் பிரபு மற்றும் உறவினரான மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் கோபிசெட்டிபாளையம் பகுதியில் இருந்து மதுரை நோக்கி காரில் வந்தனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் காந்திகிராமத்தை அடுத்த அம்பாத்துறை ஹெலி காப்டர் இறங்கு தளத்திற்கு அருகில் அதிவேகமாக வந்த கார் ஓட்டு நரின்  கட்டுப்பாட்டை இழந்து  சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவ ரில் மோதி  கவிழ்ந்தது. இதில்  பரமேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பால சுப்ரமணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார்.


 

;