districts

img

மதுரை மாவட்ட வீடியோ போட்டோ ஒளிப்பதிவாளர் சங்கம் பொதுக்குழு கூட்டம்

மதுரை மாவட்ட வீடியோ போட்டோ ஒளிப்பதிவாளர் சங்கம் பொதுக்குழு கூட்டம் செவ்வாயன்று அவனியாபுரம் அசல் மலபர் பீடி மகாலில் மாவட்டத் தலைவர் கே. பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது மாவட்டச் செயலாளர் ஸ்ரீபிரபு வேலை அறிக்கையும், பொருளாளர் வி. செ. தணிகைமணி பொருளாளர் அறிக்கையும் சமர்பித்தனர். மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன் சங்கத்தின் டைரியினை வெளியிட மூத்த உறுப்பினர் ரேமுகி ஜெகநாதன் பெற்றுக்கொண்டர். கூட்டத்தில் நிகழ்ச்சிகளுக்கு  எடுக்கப்படும் வீடியோ , புகைப்படம் புதிய விலை நிர்ணயம் மற்றும் உறுப்பினர்களுக்கு மருத்துவ குழு காப்பீடு திட்டங்கள் பதிவு செய்யப்பட்டது .கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டு 800- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.