districts

img

வளர்ச்சித் திட்டப் பணிகளை மதுரை மேயர் ஆய்வு

மதுரை, நவ.26-  மதுரை மாநகராட்சி பல்வேறு வளர்ச்சித் திட்டப்  பணியின் கீழ் சாலைகள்  அமைத்தல், மழைநீர் வடிகால்கள், பாதாளச் சாக்கடை பணிகள், தெரு விளக்குகள் பராமரித்தல்,  தூய்மை பணிகள், கால் வாய்கள் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு கட்ட மைப்பு ஏற்படுத்துதல் உள் ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. நவம்பர் 26 அன்று மண்டலம் 4 வார்டு எண்.43  காமராஜர் சாலையில் உள்ள மாநகராட்சி மணிமேகலை உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் குறித்தும், வார்டு எண்.85 கீழசந்தை பேட்டை பிஷர் தெருவில் இருந்து கழிவுநீர் செல்வதற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணி யினையும், வார்டு எண்.41  ஐராவதநல்லூர் பகுதியில்  செயல்பட்டு வரும் மாநக ராட்சி மின்மயானத்தில் பரா மரிப்புகள் குறித்தும், வார்டு எண்.41 தெப்பக்குளம் முதல் அனுப்பானடி வரை உள்ள மெயின் ரோட்டில் ரூ. 53 லட்சம் மதிப்பீட்டில் புதி தாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணிகள் உள்  ளிட்ட பல்வேறு பணிகளை மேயர், ஆணையாளர் ஆகி யோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நடைபெற்று பணி களை விரைந்து மேற்கொள் ளுமாறு சம்பந்தப்பட்ட அலு வலருக்கு மேயர் உத்தர விட்டார்.  தொடர்ந்து மாநகராட்சி  மணிமேகலை உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் புதிய வாக்காளர்களாக சேருவதற்கான விண்ணப்ப படிவங்களை மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினர்.  இந்த ஆய்வின்போது மண்டலத் தலைவர்  முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் திருமலை, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்  டனர்.

;