மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் வாகன ஓட்டுநர்களுக்கான சிஐடியு மதுரை மாநகராட்சி வாகன ஓட்டுநர்கள் சங்க அமைப்பு கூட்டம் சிஐடியு மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் தலைவராக பி.ராஜசேகர், செயலாளராக எஸ்.சுரேஷ், பொருளாளராக என்.ரவிக்குமார் உள்ளிட்ட 6 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.