districts

img

பாஜக-அதிமுக நாடகக் கம்பெனிகளை நம்பாதீர்கள்!

பாஜக-அதிமுக நாட கக் கம்பெனிகளை நம்பாதீர்கள் என வாக்காளர்களிடம் மதுரை மக்க ளவை தொகுதி வேட்பாளர் சு.வெங்க டேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், வியாழனன்று (மார்ச் 28)தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகரா ஜன் உள்ளிட்ட தோழமைக்கட்சி யினருடன் சென்று இந்திரா நகர், களத்துப் பொட்டல், அருள்தாஸ் புரம், தத்தனேரி, வெப் சர்ச் ரோடு, பொன்னகரம் பிராட்வே, அழகரடி, அந்தோணியார் கோவில், மேலப் பொன்னகரம் மெயின்ரோடு, மோதி லால் மெயின் ரோடு, ஆரப்பாளை யம் மெயின் ரோடு, எஸ்.எஸ்.காலனி, கண்ணதாசன் தெரு, ஜவகர் தெரு ஆகிய பகுதிகள் வழி யாக எஸ்.எஸ்.காலனி மெயின் ரோடு வழியாக மகபூப்பாளையம் ஜின்னா திடல், வைத்தியநாதபுரம், முனியாண்டி கோவில் தெரு, ஹவுசிங் போர்டு காலனி ஆபீஸ், கலைஞர் பூங்கா பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.

அப்போது வாக்காளர்கள் மத்தி யில் சு.வெங்கடேசன் பேசுகையில், ‘‘பல்வேறு நலத்திட்டங்களை நாடா ளுமன்ற உறுப்பினராக நானும் அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் மற்றும் தமிழக அரசும் செய்துள்ளோம். மதுரையில் ரூ.500 கோடி கல்விக்  கடன் வழங்கப் பட்டுள்ளது.  சுமார் 20 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகர ணங்கள் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இது போன்று பல்வேறு சாதனைகள் படைக்க மீண்டும் அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின் னத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என வேண்டு கோள் விடுத்தார். 

நாடாளுமன்ற  நாடகக் கம்பெனிகள்
மேலும், ‘‘மக்களைப் பிரிக்க நினைக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், பாஜக-வின் ஆதர வுக் கட்சியான அதிமுக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு மக்களைச் சந்திக்க வருகிறது. பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

பிரச்சாரத்தில் அணி வகுத்தவர்கள்
மதுரை மேயர் இந்திராணி, திமுக தலைமை நிலை செயற்குழு உறுப்பினர்கள் மா.ஜெயராமன், மா. ஒச்சுபாலு, திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பி.டி.மணிமாறன், வைகை பரமன், எம்.ஜி.முத்து கணேசன், மாவட்டத் துணைச் செய லாளர் சின்னம்மாள், திமுக மாமன்ற உறுப்பினர்கள் கஜேந்தி ரன், மகாலட்சுமி, பாமா முருகன், பகுதிச் செயலாளர்கள் எஸ்.எஸ்.மாறன், சரவணபாண்டியன், வட்டச் செயலாளர் சீனி ரமேஷ், பாண்டி செல்வி, முகேஷ் சர்மா, எஸ்.எம். ஆர்.அருண்குமார் மகளிர் தொண்ட ரணி அமைப்பாளர் நூர்ஜகான், திக மாவட்டச் செயலாளர் முருகானந் தம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின்  மாவட்டச் செயலாளர் ப.ரவிக் குமார், மதிமுக மாவட்டச் செயலா ளர் முனியசாமி, மக்கள் நீதி மய்யம் மதுரை மண்டலச் செயலாளர் அழகர், வல்லரசு பார்வார்டு பிளாக் தலைவர் அம்மாசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், பகுதிக் குழுச் செயலாளர்கள்  வி.கோட்டைச்சாமி, வை.ஸ்டா லின், மாமன்ற உறுப்பினர்கள் டி.குமரவேல், வை.ஜென்னியம் மாள், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ம.பாலசுப்பிரமணியம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மோடியின்  
ரோடு ஷோவும் 
மதுரை மக்களின் ரோடு ஷோவும்

பிரதமர் மோடி கோயம்புத்தூரில் ரோடு ஷோ நடத்தினார். காணும் இடங்கள், திரும்பும் இடங்கள் எல்லாம் மக்கள் தலைகளாக இருக்க வேண்டுமென்பதற்காக மக்கள் திரட்டப்பட்டனர். ஆனால், அவரது ரோடு ஷோவின் போது கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால், மதுரை தொகுதி வேட்பா ளர் சு.வெங்கடேசன் வாக்கு கேட்டு சென்றபோது, எந்தக் கடைகளும் அடைக்கப்படவில்லை. கடைக ளில் பொருட்கள் வாங்க வந்திருந்த மக்களும், கடை உரிமையாளர்க ளும் கையசைத்துதங்களது வாக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்திற் ற்கே என்பதை உறுதிப்படுத்தினர்.  ஆங்காங்கே திரண்டிருந்த மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வர வேற்று தங்களது வாக்குகள் சு.வெங்கடேசனுக்கே என்பதை உறுதிப்படுத்திச் சென்றனர்.
 

;