districts

img

ஆத்தூரில் கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் துவக்கம்

சின்னாளபட்டி,மே 24- வேளாண்மை உழவர் நலத் துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தபின் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சீவல்சரகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுற வுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். முதல்கட்ட மாக 16.30-ஹெக்டேர் தரிசு நிலங்  கள் விளை நிலங்களாக மாற்றப்  பட்டுள்ளது. உழவர் நலத்துறையின் மூலம் ரூ.925000 மதிப்பீட்டில் 576- பயனாளிகளுக்கு நலத்திட்டகள் வழங்கப்பட்டன. இதேபோல தோட்  டக்கலைத்துறை, வேளாண்பொறி யியல் துறை, வருவாய்துறை மற்  றும் கூட்டுறவுத்துறை மற்றும் தாட்கோ திட்டத்தின் மூலம் ரூ. 4,415,206 மதிப்பில் 1361- பயனாளி கள் பயனடைந்துள்ளனர்.  விழாவில் ஆத்தூர் கிழக்கு  ஒன்றிய செயலாளர் முருகேசன், ஒன்றிய சேர்மன் மகேஷ்வரி, துணை சேர்மன் ஹேமலதா ,சின்னாளப்பட்டி பேரூராட்சி தலை வர் பிரதீபா கனகராஜ், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா, பிடிஓக்கள் தட்சிணாமூர்த்தி ,ஏழு மலை, வேளாண் துறை உதவி இயக்குனர் உமா ,சீவல்சரகு ஊரா ட்சி மன்றத் தலைவர் ராணி ராஜேந்தி ரன், செயலர் சேசுராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;